Last Updated : 20 Sep, 2015 12:29 PM

 

Published : 20 Sep 2015 12:29 PM
Last Updated : 20 Sep 2015 12:29 PM

ஐக்கிய அரபு அமீரக பிரதமரின் மகன் மரணம்

ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமதுவின் மகன் ஷேக் ரஷீத் (33) மாரடைப்பால் நேற்று காலமானார்.

அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ரஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டமைப்பு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். துபாய் மன்னர் ஷேக் முகமது தற்போது அமீரகத்தின் பிரதமராக உள்ளார்.

அவரது மகன் ஷேக் ரஷீத். சிறந்த விளையாட்டு வீரர். குதிரை யேற்றம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் நேற்று திடீ ரென மாரடைப்பால் உயிரிழந் தார். அவரது மறைவுக்கு 7 அமீரகங்களின் தலைவர் களும் மூன்று நாட்கள் துக்கம் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x