Last Updated : 05 Dec, 2015 12:53 PM

 

Published : 05 Dec 2015 12:53 PM
Last Updated : 05 Dec 2015 12:53 PM

ஐஎஸ்ஸுக்கு எதிரான போர் கடினமானது: அமெரிக்கா தகவல்

அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட், வாஷிங்டனில் கூறிய தாவது:

“ஐஎஸ்ஸுக்கு எதிரான போர் மிக நீண்ட சவாலான போர் என்பதை நாங்கள் அறிவோம். எனினும் எங்களின் கூட்டணி என்பது ஒற்றுமையானது, உறுதியானது. இராக், சிரியாவில் ஐஎஸ் அமைப் பின் முக்கிய கேந்திரங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

ஐஎஸ்ஸுக்கு எதிராக தரை வழியாக போரிடும் உள்நாட்டு அரசுகளுக்கான எங்களின் ஆதரவை மேலும் அதிகரித் துள்ளோம்.

அமெரிக்காவும் அதன் 65 நட்பு நாடுகளும் ஐஎஸ்ஸின் பலத்தை ஒடுக்கி, அழிப்போம். சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய பிரிட்டனைப் பாராட்டுகிறோம். ரஷ்யாவின் தாக்குதல் நோக்கம் வேறாக இருக்கிறது. அவர்கள் வேறு தரப்புக்கு ஆதரவாக இறங்கி யுள்ளனர். சிரிய அதிபருக்கு ஆதர வாக ரஷ்யா களமிறங்கி இருப்பது, அழிவை மேலும் மோசமாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x