Last Updated : 20 Sep, 2015 12:30 PM

 

Published : 20 Sep 2015 12:30 PM
Last Updated : 20 Sep 2015 12:30 PM

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமாகாது: பரூக் அப்துல்லா திட்டவட்டம்

எத்தனை நூற்றாண்டுகளானாலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானுக்கு சொந்தமாகாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரான அவர் உடல்நலக்குறைவால் லண்டனில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இடையி லான உறவில் காஷ்மீர் முக்கிய விவகாரம் என்பது உண்மைதான். ஆனால் பாகிஸ்தான் அரசு என்ன முயற்சி செய்தாலும் காஷ்மீர் மாநிலம் அந்த நாட்டுக்கு சொந்த மாகாது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பாகிஸ்தானின் முயற்சி பலிக்காது. இருநாட்டு எல்லைகள் மாறாது.

எல்லைப் பகுதிகளில் பாகிஸ் தான் குண்டுகளை வீசுகிறது. அதற்குப் பதிலடியாக நாங் களும் (இந்தியா) குண்டுகளை வீசுகிறோம். இதில் இருதரப்பிலும் அப்பாவி மக்கள் பலியாகின்றனர். 65 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. இது மாற வேண்டு மென்றால் அமைதிப் பேச்சுவார்த் தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் இருநாடுகளிடம் நான் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இதுவரை சண்டை யிட்டது போதும். துயரத்தில் வாழ்வதைவிட ஒன்றாக சேர்ந்து முன்னேறலாம்.

பாகிஸ்தான் மக்கள் காஷ்மீ ருக்கு சுற்றுலா பயணிகளாக வந்து செல்லலாம். இங்குள்ள குல்மார்க், பெல்காம் மற்றும் அழகிய பூங்காக் களை பார்த்து ரசிக்கலாம். காஷ்மீர் உணவு வகைகளை ருசித்து சுவைக்கலாம்.

எனது தாத்தா மற்றும் மூதாதை யர்களின் உடல்கள் லாகூரில் புதைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் அது நடக்காது. காஷ்மீரில் இருந்து நேரடியாக இஸ்லாமாபாத், கராச்சி, லாகூருக்கு செல்ல ஆசையாக இருக்கிறது.

நான் உயிரிழந்த பிறகு எனது ஆன்மா நிச்சயமாக அங்கு செல்லும். அதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தீர்க்கப் படாத பிரச்சினை, இந்தியாவுடன் போருக்கு தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் அண்மையில் கூறினார்.

பாகிஸ்தான் தேசிய பாது காப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் கூறியபோது, இந்தியா தன்னை பெரியண்ணனாக நினைத்து நடந்து கொள்கிறது, நாங்கள் அணுஆயுத நாடு என்பதை மறந்துவிடக்கூடாது என்று கூறினார்.

பாகிஸ்தான் தலைவர்கள் பகை மையை வளர்க்கும் வகையில் பேசி வரும் நிலையில், வன் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதிப் பாதைக்கு திரும்புமாறு பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x