Last Updated : 05 Jan, 2017 03:36 PM

 

Published : 05 Jan 2017 03:36 PM
Last Updated : 05 Jan 2017 03:36 PM

எச்1பி விசா சீர்த்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம்

அயல்நாட்டு ஊழியர்கள், குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் வர்த்தகங்களை தீர்மானிக்கும் எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது எச்1பி விசா நடைமுறைகளைக் கொண்டு தவறாகப் பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களை மலிவான சம்பளம் மூலம் வெளியேற்றும் நடைமுறையை அகற்றும் நோக்கத்துடனும் அதே வேளையில் திறமை வாய்ந்த அயல்நாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படாதவாறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஆண்டு சம்பளம் 100,000 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்டர் டிகிரி விலக்கும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்னி, சோகால் எடிசன் உள்ளிட்ட நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைக்காகவும் மலிவான சம்பளத்திற்காகவும் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி அயல்நாட்டு ஊழியர்களை எச்1பி விசா நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி நியமித்ததையடுத்து இந்த சீர்திருத்த மசோதா மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“அமெரிக்கா மீண்டும் முன்னணியில் திகழ, உலகின் சிறந்த திறமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதே வேளையில் எச்1பி விசா நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி நிறுவனங்கள் மலிவான சம்பளத்தில் அயல்நாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து, அமெரிக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் அகற்ற வேண்டும்” என்று இந்த மசோதாவின் முக்கிய அங்கமாக விளங்கும் உறுப்பினர் இஸா என்பவர் தெரிவித்துள்ளார்.

“இன்று நாங்கள் அறிமுகம் செய்துள்ள மசோதாவில் இந்த இரண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மதிப்புமிக்க, திறமைகள் உலகிலிருந்து அமெரிக்காவுக்கு பயன்பட வேண்டும், அதாவது ஏற்கெனவே உள்ள பணித்திறன்களால் பூர்த்தி செய்யமுடியாத பணிகளுக்கு வெளித்திறமைகள் தேவை” என்ற அடிப்படையில் இந்த திருத்த மசொதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் பீட்டர்ஸ் கூறும்போது, “எச்1பி விசா முறைகேடுகளை ஒழித்து அமெரிக்க பணிகளை காப்பது என்பது திறமையான அயல்நாட்டு பணியாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள விசா கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாகும். மேலும் பணிகளை வெளிநாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படுவதையும் தடுக்குமாறு உயர் திறன் விசா ஒழுங்கை அனைவருக்குமான ஒரு விஷயமாக மாற்றுவதுதான் குறிக்கோள்” என்றார்.

அமெரிக்காவில் முதலீடு செய்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான விசா சீர்த்திருத்தங்கள் அதிபராகப் பொறுப்பேற்கும் டொனால்டு ட்ரம்ப்பின் பிரதான திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x