Last Updated : 06 Oct, 2016 04:41 PM

 

Published : 06 Oct 2016 04:41 PM
Last Updated : 06 Oct 2016 04:41 PM

உண்மைகளை திரித்துக் கூறிவருகிறது: இந்தியா மீது பாக். ராணுவ தளபதி சாடல்

பாகிஸ்தான் பற்றி இந்தியா கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகக் குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப், பன்னாட்டுச் சமூகம் இதற்காக இந்தியாவை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பொய்களை இந்தியா பரப்பி வருகிறது என்று சாடிய ரஹீல் ஷரீப், பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவகைத் தாக்குதல் மற்றும் தந்திரமான கணக்கிடுதல்கள் ஒரு போதும் தண்டிக்கப்படாமல் போய் விடாது என்று எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஹீல் ஷரீப் கூறும்போது, “சமீபத்தில் காஷ்மீருக்கு உள்ளாகவும் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியிலும் தொடர்ச்சியான கட்டுக்கதைகளின் அவிழ்ப்பு மற்றும் உண்மைகளைத் திரிக்கும் இந்தியாவின் ஒட்டுமொத்த விரக்தியின் நாடகத்தைக் கண்டோம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஈடு இணையற்ற விதத்தில் செயலாற்றிய ஒரு தேசத்திற்கு எதிராக (பாகிஸ்தான்) இந்தியா தொடர்ந்து பொய்களையும் புனைந்துரைகளையும் அவிழ்த்து விடுவதை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும்.

எனவே திட்டமிட்ட நோக்கத்துடன் செயல்படும் ஆக்ரோஷம், அல்லது தந்திரோபாயமான தவறான ஆக்ரோஷப் பிரயோகம் தண்டிக்காமல் விடப்பட மாட்டாது.

எங்கள் தாய்நாட்டைக் காக்க நாங்கள் ஓய்வுஒழிச்சலில்லாமல் பாடுபடுவோம். எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த உறுதி மற்றும் எங்கள் ராணுவப்படைகள் இப்பகுதியில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளை வெற்றியடைய விடாது, தீய திட்டங்கள் முறியடிக்கப்படும்.

பாகிஸ்தான் விரோதிகள், இந்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வியூகம் வகுக்கிறார்கள். சமத்துவம் மற்றும் பரஸ்பர நட்புறவு ஆகிய மதிப்பீடுகளுடன் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்பும் பொறுப்புள்ள நாடு பாகிஸ்தான். இப்படியிருக்கும் அதே வேளையில் பாகிஸ்தானின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள் மற்றும் வெளிப்புற சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறோம்.

உள்நாட்டு நிலவரங்களைப் பொறுத்தவரையில் ஸார்ப்-இ-ஆஸ்ப் என்ற நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அகற்ற வெற்றிகரமாக பாடுபட்டு வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x