Published : 07 Jan 2017 09:49 AM
Last Updated : 07 Jan 2017 09:49 AM

இராக்கின் புராதன நகரம் தீவிரவாதிகளால் தரைமட்டமானது

இராக்கின் புராதன நகரமான நிம்ருத், ஐ.எஸ். தீவிரவாதிக ளால் முழுமையாக அழிக்கப்பட் டுள்ளது.

இராக்கின் மோசூல் அருகே திக்ரித் நதிக்கரையில் நிம்ருத் நகரம் அமைந்துள்ளது. சுமார் 3000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அந்த நகரில் பழமை யான அரண்மனைகள், கோயில் கள் இருந்தன.

கடந்த 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிம்ருத் நகரை கைப்பற்றினர். அப்போது முதல் நகரின் புராதன சின்னங் களைத் தீவிரவாதிகள் அழிக்கத் தொடங்கினர். கடந்த 2015 மார்ச் சில் கனரக இயந்திரங்கள் மூலம் அனைத்து அரண்மனை கள், கோயில்கள் தரைமட்டமாக் கப்பட்டன.

சுமார் 2 ஆண்டுகள் போருக்குப் பிறகு 2016 நவம்பரில் நிம்ருத் நகரை இராக் அரசுப் படை மீட்டது. ஆனால் அங்கு புராதன சின்னங்கள் எதுவுமே இல்லை. இடிபாடுகள் மட்டுமே குவிந்து கிடந்தன.

அரசு கட்டுப்பாட்டில் நிம்ருத் நகரம் வந்த பிறகும் புனர மைப்புப் பணிகள் இதுவரை நடை பெறவில்லை. நகரில் எஞ்சியுள்ள கலைப்பொருட்களையும் சிலர் திருடிச் செல்வதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறியபோது, நிம்ருத் நகரில் 60% புராதன சின்னங்களை புனரமைக்க முடியாத அளவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்து விட்டனர். எஞ்சியுள்ள 40 சதவீத புராதன சின்னங்களை மீட்க வேண்டும். இதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த எருது சிலை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x