Last Updated : 03 Jul, 2017 05:17 PM

 

Published : 03 Jul 2017 05:17 PM
Last Updated : 03 Jul 2017 05:17 PM

இந்தியாவில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்துவோம்: ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சலாஹுதின்

இந்தியாவில் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் வேண்டுமானலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதின் கூறியுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள சையத் சலாஹுதின் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைமைக் கமாண்டோ ஆவார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரமாக உலா வரும் சலாஹுதினுக்கு 13 தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலாஹுதின் (இவரின் இயற்பெயர் முகமத் யூசஃப் ஷா) பேசும்போது, "காஷ்மீரில் இந்திய படைகளை எந்த நேரமும், எந்த இடத்திலும் தாக்கும் எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் உள்ளனர்.

நாங்கள் இந்தியப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக எங்களது தாக்குதலை தொடங்கியுள்ளோம். நாங்கள் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம். ஆனால் பொது மக்கள் மற்றும் பொது இடங்களில் தாக்குதல் நடத்த மாட்டோம்.

இந்தியாவை தாக்குதவதற்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, "ஆயுதங்களை நான் சர்வதேச சந்தையில் வாங்குகிறேன். மேலும் ஆயுதங்கள் தேவையான பணம் அளித்தால் என்னால் சர்வதேச சந்தையிலும் ஆயுதங்களை எப்போது வேண்டுமானாலும் வாங்க முடியும்"

அமெரிக்க சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்திருப்பது குறித்து, "அமெரிக்காவின் பிரகடனத்தையும் மீறி காஷ்மீர் விடுதலைக்கான எங்களது போராட்டம் தொடரும்.

காஷ்மீர் பிரச்சினை ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் பாதுகாப்புக் கவுன்சில்படி 18 தீர்மானங்கள் சட்டபூர்வமாக காஷ்மீர் போராட்டத்தை சுதந்திர போராட்டமாக அங்கீகரிக்கிறது. எங்களது அமைப்பை பயங்கரவாத இயக்கம் என வகைப்படுத்த முடியாது.

இந்திய காஷ்மீர் சுதந்திர போரட்டத்தை தீவிரவாத செயல் என்று பலமுறை மட்டுப்படுத்த முயற்சித்தது. ஆனால் இந்தியாவின் முயற்சி சர்வதேச அளவில் தோற்றுவிட்டது. சுதந்திரத்துக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல.

காஷ்மீர் சுதந்திர போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்று அமெரிக்கா மற்றும் இந்தியா கூறும் எந்த கருத்து நிரூபிக்கப்பட முடியாதவை.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் காஷ்மீர் விடுதலைக்கு தார்மீக ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x