Published : 14 Aug 2015 03:31 PM
Last Updated : 14 Aug 2015 03:31 PM

ஆகஸ்ட் 2014 முதல் 60-க்கும் மேற்பட்ட அயல்நாட்டவர்கள் தலையை துண்டித்துள்ளது ஐ.எஸ்.

ஆகஸ்ட் 2014 முதல் ஐ.எஸ். அல்லது ஐ.எஸ் தொடர்பான தீவிரவாதிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட அயல்நாட்டவர்களின் தலையை துண்டித்து மரண தண்டனை விதித்துள்ளனர்.

பிப்ரவரி 21, 2015-ல் லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் தலைகளை துண்டித்த சம்பவம் இராக், சிரியாவிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகள் பரவத் தொடங்கியதை சுட்டும் சம்பவமாகக் கருதப்படுகிறது.

தலைதுண்டிக்கப்பட்ட அயல்நாட்டவர்கள் சிலரது விவரம்:

ஜேம்ஸ் ஃபோலே:

ஆகஸ்ட் 19, 2014

அமெரிக்க ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், புகைப்பட நிருபர்.

நவம்பர் 22, 2012-ல் வடக்கு சிரியாவில் கடத்தப்பட்டார்.

ஐ.எஸ் தீவிரவாதி ஜிஹாதி ஜானால் கொல்லப்படும் முதல் அமெரிக்க குடிமகன்.

அலி அல் சையத்

ஆகஸ்ட் 28, 2014.

ஆர்சல் சண்டையின் போது பிடிபட்ட லெபனான் ராணுவ அதிகாரி.

செப்.1-ம் தேதி இவரது உடல் லெபனான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது அடையாளம் டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

ஸ்டீவன் சால்டாஃப்

செப்,.2, 2014

டைன் இதழான ஜெருசலம் போஸ்ட்டின் இஸ்ரேலிய-அமெரிக்க நிருபர்

சிரியாவின் அலெப்போவில் 2013-ம் ஆண்டு கடத்தப்படுகிறார்.

'ஜிஹாதி ஜான்' சால்டாஃப் தலையை துண்டிக்கும் காட்சி வீடியோவாக வெளியிடப்பட்டது.

அப்பாஸ் மெட்லெஜ்

செப்.6, 2014

லெபனான் ராணுவ வீரர். தலை துண்டிக்கப்பட்டது. இவரது வெட்டப்பட்ட தலை, உடல் புகைப்படங்கள் ஜிஹாதி ட்விட்டர் கணக்குகளில் வெளியாகின.

டேவிட் ஹெய்ன்ஸ்

செப்.13, 2014

பிரிட்டன் உதவிப்பணியாளர். சிரியாவிலிருந்து மார்ச் 2013-ல் கடத்தப்பட்டார்.

இவர் கொல்லப்பட்ட வீடியோவை ஐ.எஸ் வெளியிட்டது. அதாவது ‘அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டது.

ஹெர்வி கூர்டெல்: செப்.24, 2014

பிரான்ஸைச் சேர்ந்த மலையேறு பயிற்றுவிப்பாளர் அல்ஜீரியாவில் இவர் கடத்தப்பட்டார்.

தொடர்ந்து ஐ.எஸ். மீது வான்வழித் தாக்குதலை பிரான்ஸ் மேற்கொண்டால் கூடெலின் தலையை துண்டிப்போம் என்று ஐ.எஸ். எச்சரித்தது.

தலைதுண்டிப்பு வீடியோ “பிரான்ஸ் அரசுக்கு ஒரு ரத்தச் செய்தி” என்று தலைப்பில் வெளியிடப்பட்டது.

ஆலன் ஹென்னிங்:

அக்டோபர் 3, 2014

பிரிட்டன் உதவிப் பணியாளர், சிரியாவிலிருந்து 2013 டிசம்பரில் கடத்தப்பட்டார்.

பிரிட்டன் ஐ.எஸ். உடன் பேச்சு வார்த்தை நடத்தியது. செப்.13, ஹென்னிங்தான் அடுத்த தலைதுண்டிப்பு என்று ஐ.எஸ் எச்சரித்தது.

பீட்டர் காசிக்:

நவம்பர் 16, 2014

முன்னாள் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர், மனிதநேய தொண்டர்

அக்டோபர் 1, 2013-ல் கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.இடம் சிக்கினார்.

பிடிபட்டவுடன் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யபப்பட்டார்.

ஹருணா யுகாவா மற்றும் கெஞ்ஜி கோடோ

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இவர் அக்.2014-ல் பிடிபட்டார்.

யுகாவா விடுதலை செய்யப்படுவார் என்று கூறி அவரது சகநாட்டவர் கோடோ பிடித்து வைக்கப்பட்டார்.

யுகாவா, கோடோ இருவரையும் கொலை செய்த வீடியோக்கள் ஜனவரியில் வெளியிடப்பட்டன.

டோமிஸ்லாவ் சாலோபெக்

பிரான்ஸ் நிறுவனத்துக்காக எகிப்தில் பணியாற்றிய குரேஷிய நாட்டவர்.

ஐ.எஸ்.-க்கு எதிராக போரில் குரேஷியாவின் பங்கை குற்றம்சாட்டும் படங்களுடன் இவர் கொலை செய்யப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன.

ஐ.எஸ். அமைப்பின் எகிதிய பிரிவு இவரது தலைதுண்டிப்புக்கு பொறுப்பேற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x