Last Updated : 16 May, 2016 09:49 AM

 

Published : 16 May 2016 09:49 AM
Last Updated : 16 May 2016 09:49 AM

அமைதி காக்கும் பணியில் உயிர்நீத்த 4 இந்தியர் உட்பட 129 பேருக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா.வின் அமைதி காக்கும் பணியின்போது உயிர் தியாகம் செய்த நான்கு இந்திய வீரர்கள் உட்பட 129 பேருக்கு ஐ.நா.வின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டில் ஐ.நா சார்பில் பணியாற்றி வந்த சுப்கரண் யாதவ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த தாக்குதலின் போது தனது உயிரை தியாகம் செய்து பலரை காப்பாற்றினார். ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மணிஷ் மாலிக் என்பவர் உயிரிழந்தார்.

இதேபோல, தெற்கு சூடானில் ஐ.நா.வுக்காக பணியாற்றி வந்த ஹவில்தார் அமல் தேக்கா, நாயக் ராகேஷ் குமார் இருவரும் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத் தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ககன் என்பவரும் கடந்த ஆண்டு நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ஐ.நா.வின் அமைதி காப்பாளர்களுக்கான சர்வதேச தினத்தையொட்டி வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கான பதக்கங்கள் நேற்று அறிவிக்கப் பட்டன. இதில் உயிர் தியாகம் செய்த நான்கு இந்திய வீரர்கள், தன்னார்வலர் உட்பட 129 பேரின் குடும்பத்தினருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளன. வரும் 19-ம் தேதி ஐ.நா.வின் அமைதி காப்பாளர்களுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது பதக்கங்களை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வழங்குவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x