Last Updated : 08 Nov, 2016 03:16 PM

 

Published : 08 Nov 2016 03:16 PM
Last Updated : 08 Nov 2016 03:16 PM

அமெரிக்க தேர்தல்: விண்வெளியிலிருந்து 2 வீரர்கள் வாக்களிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி விண்வெளியிலிருந்து தங்களது வாக்கினை பதிவு செய்திருக்கின்றனர் அந்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் விண்வெளி வீரர்களான ஷேன் கிம்ப்ரோவும், கேட் ரூபின்ஸூம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்களது வாக்கினை விண்வெளியிலிருந்து முன்னதாகவே பதிவு செய்து விட்டனர் என நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 1997-ம் ஆண்டு முதல் விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

டேவிட் உல்ஃப் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் முதல் முறையாக தனது வாக்கினை விண்வெளியில் இருந்து பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x