Published : 15 Nov 2013 10:00 AM
Last Updated : 15 Nov 2013 10:00 AM

சென்னை கலங்கரை விளக்கம்: இன்று முதல் அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை வெள்ளிக்கிழமை முதல் பொது மக்கள் பார்வையிடலாம். மத்தியக் கப்பல்துறை அமைச்சர். ஜி.கே.வாசன் கலங்கரை விளக்கத்தையும், கலங்கரை விளக்கத் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தையும் புதன்கிழமை திறந்து வைத்தார். நவ்டெக்ஸ் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

22 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்தியாவில் 185 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. ஆனால் 22 ஆண்டுகளாக மெரினா கலங்கரை விளக்கத்தை மக்களால் பார்க்க முடியவில்லை. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று இதனை திறந்து வைக்கிறோம்.

பரங்கிப்பேட்டை, முட்டம்

தட்பவெப்பநிலை, வானிலை எச்சரிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவை குறித்த தகவல்களை நேரடியாக கப்பல்களுக்கு அச்சு வடிவில் தெரிவிக்கும் வகையில் ரூ.20.25 கோடி செலவில் நவ்டெக்ஸ் என்ற தகவல் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக இந்தியாவில் அமைக்கப்படும் 7 ஒலிபரப்பு நிலையங்களில் 2 நிலையங்கள் தமிழ்நாட்டில் அமையும்.அவை கடலூர் பரங்கிப்பேட்டை, கன்னியா குமரி முட்டத்தில் அமையும். கட்டுப்பாட்டு மையம் புதுச்சேரியில் ஏற்படுத்தப்படும்.

மரக்காண கலங்கரை விளக்கம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரக்காணம் கலங்கரை விளக்கம் வருகிற 30-ம்தேதி திறக்கப்படும். அருங்காட்சியகத்துடன் கூடிய மகாபலிபுரம் கலங்கரை விளக்கம் ஜனவரி மாதம் திறக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, ராமேசுவரம் கலங்கரை விளக்கங்க ளும் திறக்கப்படும்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய 15 சுற்றுலா கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 4 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் வாசன்.

விழாவில் இந்தியக் கலங்கரை விளக்கங்கள் டைரக்டர் ஜெனரல் கேப்டன் ஏ.எம்.சூரஜ், மத்தியக் கப்பல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜுகாரி, சென்னை துறைமுகப் பொறுப்புக்கழகத் தலைவர் அ்துல்ய மிஸ்ரா, எண்ணூர் துறைமுகசபை தலைவர் பாஸ்கராச்சார், கடலோரக் காவல் படை ஐ.ஜி. சத்ய பிரகாஷ் சர்மா, சென்னை கலங்கரை விளக்க இயக்குநர் ராம்தாஸ் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

நுழைவுக்கட்டணம் எவ்வளவு?

சென்னை கலங்கரை விளக்கத்தைத் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மக்கள் பார்க்கலாம்.

திங்கள்கிழமை விடுமுறை. நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.10. குழந்தைகளுக்கு ரூ.5. இங்குள்ள தொழில்நுட்ப அருங்காட்சி யகத்தைப் பார்க்கத் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கும் பெரியவர்களுக்கு ரூ.10. குழந்தை களுக்கு ரூ.5 எனத் தனியாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x