Published : 27 Apr 2017 10:09 AM
Last Updated : 27 Apr 2017 10:09 AM

உ.வே.சா. விருது பெற்றார் ம.அ.வேங்கடகிருஷ்ணன்

தமிழ் புத்தாண்டயொட்டி தமிழக அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு கபிலர், உ.வே.சா., கம்பர், சொல்லின் செல்வர் போன்ற விருதுகளை வழங்குவது வழக்கம். கடந்த மூன்று வருடங்களாக எழுத்துலக வல்லுநர்களுக்கு இவ்விருது கள் வழங்கப்பட்டு வருகின்றன. இலக்கணம் மற்றும் இலக்கிய வல்லுநர்களுக்கு கபிலர் விருதும், பல நூல்களை எழுதிப் பதிப்பித்தல் துறையில் சிறந்த வர்களுக்கு உ.வே.சா. விருதும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு உ.வே.சா. விருது திருவல்லிக்கேணி கீதாச் சார்யன் முதுமுனைவர் ம.அ.வேங் கடகிருஷ்ணனுக்கு வழங்கப் பட்டது. இவர் சென்னைப் பல் கலைக்கழக வைஷ்ணவிசம் துறையின் மேனாள் தலைவராவார்.

‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓலைச்சுவடியில் உள்ள பல் வேறு பாடல்கள், கதைகள் போன்ற வற்றை புத்தக வடிவில் கொண்டு வந்தேன். ஓலைச்சுவடிகளில் மறைந்திருந்த இலக்கியங்களை நூல்களாக பதிப்பித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஓலைச்சுவடி வடிவில் உள்ள சுமார் 400 நாலாயிர திவ்ய பிர பந்த பாடல்களுக்கு உள்ள நம்பிள்ளை உரையை ‘இயற்பா வ்யாக்யானம்’ என்னும் நூலாகப் படைத்தேன். சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் எனது ஆய்வுக்கு வேறொரு நூலைத் தேடும்போது நம்பிள்ளை உரையை உள்ளடக் கிய 700 சுவடிகள் கிடைத்தன. நம்பிள்ளை 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அதேபோல, 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளை லோகாசாரியாரின் வடமொழி இலக் கியம் சுவடி வடிவில் இருந்தது.கர்நாடக மாநிலம் மேலக்கோட்டை நூலகத்தில் இச்சுவடி கிடைக்கப் பெற்றது. அதனை நூலாக கொண்டு வந்தேன் என்றார்.

‘அனைத்துலகும் வாழப் பிறந்த மாமுனிவர்’ என்ற தலைப் பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படைக்கும் கே.எஸ்.எல். மீடியா லிமிடெட் சார்பில் தொடங்கப் பட்டுள்ள ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் முதல் படைப்பான ‘ ராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ என்ற சிறப்பு மலரில் இவர் கட்டுரை எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x