Published : 05 Mar 2015 03:17 PM
Last Updated : 05 Mar 2015 03:17 PM

நாகர்கோவிலில் 7,8 தேதிகளில் புகைப்படக் கண்காட்சி

சுமார் 19000 புகைப்பட ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் 'புகைப்படப்பிரியன்' குழுமம் தனது மூன்றாம் வருடக் கூட்டத்தை "எக்ஸ்போஷர் 15" எனும் புகைப்படக் கண்காட்சியாக நடத்த உள்ளது.

வருகிற சனி-ஞாயிறு, மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் "வளனார் திருமண்டபம்", அசிசி வளாகம், வேப்பமூடு ஜங்ஷன், நாகர்கோவிலில் நடைபெறுகிற இக்கண்காட்சியில் உலகெங்கிருந்தும் ஆர்வத்துடன் பலர் அனுப்பிய படங்களில் ஆயிரத்துக்கும் மேலானவை தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கானுயிர், இயற்கை, ஸ்ட்ரீட், டேபிள் டாப், கருப்பு வெள்ளை, மேக்ரோ, பனோரமா, டெக்னிகல், லான்ட்ஸ்கேப், ஸ்டில் லைஃப் என அத்தனை வகைப் படங்களும் இடம் பெற உள்ளன. இத்துடன் உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் விருது பெற்ற படங்களையும் காண ஒரு வாய்ப்பு. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

தலைப்பு எதுவுமின்றிப் பொதுவான சிறந்த படங்களுக்கான அழைப்புடன் புகைப்படப் போட்டி அறிவிப்பாகியிருந்தது. கலந்து கொள்ளும் படங்களில் வெற்றி பெறுபவை தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றோடு "ஃபோட்டோ ஆஃப் தி டே" எனக் கடந்த 45 நாட்களில் தினம் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களும் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டு சான்றிதழ்களுடன் கெளரவிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x