Published : 29 Jun 2019 10:58 AM
Last Updated : 29 Jun 2019 10:58 AM

நாகர்கோவிலிருந்து இருந்து தாம்பரத்துக்கு அந்த்யோதயா விரைவு ரயில் 2 மணி நேரம் முன்னதாக வரும்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா தினசரி விரைவு ரயில் சேவை 2 மணி நேரம் விரைவுபடுத்தப்படுகிறது. இத னால், தாம்பரத்துக்கு காலை 9.45 மணிக்கு பதிலாக 7.45 மணிக்கே வருவதற்கேற்ப ரயில் நேரம் மாற்றப்பட உள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் விழுப்புரம், தஞ்சை வழியாக திருநெல்வேலிக்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்றதால், நாகர்கோவில் வரை இந்த ரயில்சேவை நீட்டிக்கப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (16191) மறுநாள் மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதேபோல, நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு (16192) மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வரும்.

ரயிலின் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள்; கட்டணமும் குறைவு என்பதால், அதிக அளவிலான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கிறது.

இருப்பினும், நாகர் கோவிலில் இருந்து வரும் ரயில் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வருவதால் பள்ளி, கல் லூரிகள், அரசு, தனியார் அலுவல கங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் சிரமப்படுகின் றனர். இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அந்த்யோதயா ரயில், காலை 8 மணிக்குள் தாம்பரம் வந்துசேரும் வகையில் ரயில் நேரத்தை மாற்றி அமைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத் தனர். இதுதொடர்பாக தலைமை அலுவலகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு, ரயில் சேவையில் தற்போது சிறு மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில் 2 மணி நேரம் முன்னதாக காலை 7.45 மணிக்கு தாம்பரம் வந்துசேரும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x