Published : 21 Jun 2019 12:41 PM
Last Updated : 21 Jun 2019 12:41 PM

விஜயகாந்தின் வீடு, கல்லூரி, நிலம் ஏலம்; கடன் பாக்கியால் வங்கி அறிவிப்பு

ரூ.5.52 கோடி கடன் பாக்கி காரணமாக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் வீடு, கல்லூரி மற்றும் நிலம் ஆகியவற்றை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் பொறியியல் கல்லூரி ஏலம் விடப்படுகிறது. அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம் மற்றும் 10,271 சதுர அடி வணிகக் கட்டிடமும் ஏலத்துக்கு விடப்படுகிறது. கடன் தொகையான 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய்க்காக இந்த ஏலம் நடத்தப்படுகிறது.

கடனீட்டு சொத்துகள் ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துகளை மறு சீரமைத்தல், கடனீட்டு சொத்துகள் மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 2002 பிணையநலன் விதிகள் 2002 விதி 8(6)-ன் கீழ் இந்த ஏல விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 26-ம் தேதி ஏல விற்பனை செய்யப்படும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க இந்த ஏல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ்  வங்கி விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x