Published : 25 May 2019 05:02 PM
Last Updated : 25 May 2019 05:02 PM

3-வது இடத்தைக் கைப்பற்றிய அமமுக, நாம் தமிழர், மநீம: தொகுதி வாரியாக எத்தனை சதவீதம்?- முழு விவரம்

நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.

தேனி தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 39 தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தை மூன்று கட்சிகள் பகிர்ந்துகொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக அமமுக, 5.16% வாக்குகளோடு 3-வது இடத்தைப் பெற்றுள்ளது., நாம் தமிழர் கட்சி 3.89 சதவீதத்தையும் மக்கள் நீதி மய்யம் 3.72 சதவீதத்தையும் வாக்குகளாக மாற்றியுள்ளன.

அமமுக 3-வது இடம்பெற்றுள்ள தொகுதிகள் - 21

அரக்கோணம், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி.

*

நாம் தமிழர்3-வது இடம்பெற்றுள்ள தொகுதிகள் -  6

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மற்றும் கன்னியாகுமரி.

*

மக்கள் நீதி மய்யம்3-வது இடம்பெற்றுள்ள தொகுதிகள் -  12

திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி.

தொகுதி வாரியான வாக்கு விவரங்கள்

தொகுதிஅமமுக (%)நாம் தமிழர்மநீம
அரக்கோணம்5.672.492.02
ஆரணி4.052.831.29
மத்திய சென்னை3.023.9311.74
வட சென்னை3.486.3310.8
தென் சென்னை2.624.4612.03
சிதம்பரம்5.43.251.33
கோவை3.044.8411.6
கடலூர்4.33.332.27
தருமபுரி4.391.611.28
திண்டுக்கல்5.424.743.34
ஈரோடு 2.423.654.47
கள்ளக்குறிச்சி4.172.511.21
காஞ்சிபுரம்4.465.07போட்டியில்லை
கன்னியாகுமரி1.181.630.82
கரூர்2.823.491.45
கிருஷ்ணகிரி0.762.411.46
மதுரை8.444.228.37
மயிலாடுதுறை6.293.741.55
நாகப்பட்டினம் 7.025.131.45
நாமக்கல்2.063.42.73
நீலகிரி4போட்டியில்லை4.07
பெரம்பலூர்4.134.86போட்டியில்லை
பொள்ளாச்சி2.462.915.52
ராமநாதபுரம்13.34.351.4
சேலம்4.17 2.74.67
சிவகங்கை11.36.662.11
ஸ்ரீபெரும்புதூர்2.956.049.63
தென்காசி8.645.582.25
தஞ்சாவூர்9.715.47 2.22
தேனி12.282.371.44
திருவள்ளூர் 2.414.65 5.24
தூத்துக்குடி7.754.972.59
திருச்சி9.626.234.02
திருநெல்வேலி5.984.82.22
திருப்பூர்3.913.775.78
திருவண்ணாமலை3.352.391.27
விழுப்புரம்5.112.171.58
விருதுநகர்10.014.945.3

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x