Last Updated : 25 May, 2019 07:41 AM

 

Published : 25 May 2019 07:41 AM
Last Updated : 25 May 2019 07:41 AM

தடுமாற்றத்தால் இளைஞர்களை இழந்த பாமக

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் போட்டியிட்டது பாமக. இதில் தருமபுரியில் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார். அத்தேர்தலில் பாமக பெற்ற வாக்கு சதவீதம் 6.4 ஆகும். தற்போது நடந்து முடிந்த தேர் தலில் அதே தொகுதியில் அதிமுக, பாஜக, தேமுதிகவுடன் கைகோர்த்து போட்டியிட்ட அன்புமணி, 70,753 வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். 5.15 சதவீத வாக்கு களையே அவர் பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 1.25 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன.

7 தொகுதிகளிலும் தோல்வி

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அன்புமணியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளனர். வலுவான கூட்டணி அமைத்தும் அனைத்து தொகுதிகளிலும் பாமக தோல்வியைத் தழுவியதற்கு என்ன காரணம்?

இதுபற்றி அக்கட்சியின் நிர்வாகிகள், பாமகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் உள்ளவர்களிடம் பேசியபோது சில கருத்துகளை முன்வைக்கின்றனர்.

போராட்ட குணத்துடன் பொது வாழ்க் கைக்கு வந்த ராமதாஸ், அரசியல் கட்சித் தலைவரான பிறகு சில சமரசங்களுடன் தன்னை மாற்றிக்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கி, வேல்முருகன் வரை கட்சியின் 2-ம் கட்டத் தலைவர் களாக இருந்த பலரும் இப்போது அங்கு இல்லை. கருத்து வேறுபாடு கொண்ட நிர்வாகிகளை சமரசப்படுத்தி, கட்சிக்குள் வைத்திருக்க தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ராமதாஸ் ஒருவரையும் அப்படி சமரசம் செய்யவில்லை.

அன்புமணி இன்னமும் தனது செல் வாக்கை முழுமையாக உறுதிப்படுத்த வில்லை. ஆனால், எல்லா விஷயத் திலும் அவரே முன் நிற்கிறார். மூத்த நிர்வாகிகளுக்கு ராமதாஸ் கொடுக்கும் முக்கியத்துவத்தை அன்புமணி கொடுப் பதில்லை. உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராமல், வெளிமாவட்ட நிர்வாகிகளை கொண்டு வந்து தேர்தலில் நிறுத்தியதும் பாமக தோல்விக்கு ஒரு காரணம்.

மாற்றம்.. முன்னேற்றம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி முன்வைத்த ‘மாற்றம்.. முன்னேற்றம்’ கோஷம், இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் தடுமாற் றம் ஏற்பட்டதால் அந்த இளைஞர்களை பாமக இழந்துள்ளது. தற்போது அவர்களை சீமானும், கமல்ஹாசனும் கவர்ந்துள்ளனர். வன்னியர் சங்கத் தலைவராக இருந்த குரு மறைவுக்கு பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பாமக தலைமை மீது வைத்த விமர்சனமும் வன்னியர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோல ஆளும்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து விட்டு அவர்களுடனே கூட்டணி அமைத் ததை பாமகவினர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களும் ஏற்கவில்லை. இதையெல்லாம் பாமக வின் தோல்விக்கான காரணங்களாக முன் வைக்கின்றனர்.

இந்நிலையில், ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாமக தேர் தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை. தோல்விக்கான கார ணங்களை ஆராய்ந்து சரி செய்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறு வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்திருக் கிறார்.

அதன்படி அவர் தன்னையும், கட்சியையும் சுயபரிசோதனை செய்து அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதில்தான் பாமகவின் எதிர்காலம் இருக்கிறது.கருத்து வேறுபாடு கொண்ட நிர்வாகிகளை சமரசப்படுத்தி, கட்சிக்குள் வைத்திருக்க தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x