Last Updated : 25 May, 2019 12:00 AM

 

Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

கணிப்புகளை பொய்யாக்கி 23 ஆண்டுகளுக்குப் பின் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற சிபிஎம் வேட்பாளர்

கோவையில் கணிப்புகளை பொய்யாக்கி 23 ஆண்டுகளுக்குப் பின் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன்.

பல்லடம், சூலூர், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டது கோவை மக்களவை தொகுதி. இங்கு 19.58 லட்சம் வாக் காளர்கள் உள்ளனர். இதில் 12.53 லட்சம் வாக்காளர்கள் வாக்களித் தனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 14 பேர் போட்டியிட்டனர். ஆனால், திமுக கூட்டணியின் சிபிஎம் வேட் பாளர் பி.ஆர்.நடராஜன், அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அதற் கேற்ப, இக்கட்சிகளின் பிரச்சாரங் களும் தீவிரப்படுத்தப்பட்டன. திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவாக, அக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கோவையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாகனங்களில் சென்றும், முக்கிய வீதிகளில் நடந்து சென்றும், பொதுக்கூட்டம் நடத்தியும் வாக் காளர்களை சந்தித்து வாக்குகளை திரட்டினர்.

‘இரு தரப்பினருக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேசமயம் வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரத்துக்குள் தான் இருக்கும் என்று' மத்திய, மாநில உளவுத் துறைகளால் கணிக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சில சுற்றுகளில் சிபிஎம், பாஜக வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். ஆனால், சில சுற்றுகளுக்கு பிறகு சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து முன்னிலை பெற தொடங்கினார்.

முதல் சுற்றில் பி.ஆர்.நடராஜன் 25,101 வாக்குகளும், சி.பி.ராதா கிருஷ்ணன் 18,589 வாக்குகளும், 10-வது சுற்றில் பி.ஆர்.நடராஜன் 2,43,152 வாக்குகளும், சி.பி.ராதா கிருஷ்ணன் 1,72,796 வாக்குகளும், இறுதி சுற்றில் பி.ஆர்.நடராஜன் 5,70,514 வாக்குகளும், சி.பி.ராதாகிருஷ்ணன் 3,91,505 வாக்குகளும் பெற்றனர். முடிவில், வாக்கு வித்தியாச கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்கு வித்தியாசத்தில் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.

கோவை மக்களவை தொகுதி யில் 1996-ம் ஆண்டு போட்டியிட்ட திமுகவின் மு.ராமநாதன், 2.62 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 2004-ம் ஆண்டு சிபிஐ சார்பில் போட்டியிட்ட சுப்பராயன் 1.63 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். இதற்கு இடைப்பட்ட காலங்களில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணனை தவிர, மற்றவர்களின் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை.

1996-ம் ஆண்டுக்கு பின், அதா வது 23 ஆண்டுகளுக்கு பின்னர் 1.79 லட்சம் என்ற அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை சிபிஎம் கட்சியின் பி.ஆர்.நடராஜன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து திமுக, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கேட்ட போது, ‘எங்கள் வேட்பாளர் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த் திருந்தோம். ஆனால், எங்கள் மகிழ்ச் சியை இரட்டிப்பாக்கும் வகையில், 1.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். தொழில்களை பாது காக்கவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் மக்களின் மன நிலையை அறிந்து பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸிய அமைப்புகள், கூட்டணி கட்சியினர் மேற்கொண்ட பிரச்சார யுக்திதான் வெற்றிக்கு முக்கிய காரணம்.

வாக்குப்பதிவு முடிந்த நேரத்தில், பல்லடம், சிங்காநல்லூரில் இருந்து வந்த தோழர்கள் பல்லடத்தில் 50 ஆயிரம், சிங்காநல்லூரில் 20 ஆயிரம் வாக்கு முன்னிலை பெற்றுத் தருவோம் எனக் கூறினர். அதன்படி, பல்லடத்தில் 40 ஆயிரம், சிங்காநல்லூரில் 22 ஆயிரம் வாக்கு முன்னிலை பெற்றுத் தந்துள்ளனர். கோவை வடக்கு, தெற்கு தொகுதிகளில் இழுபறி என நினைத்தோம். ஆனால், அங்கும், கவுண்டம்பாளையம் தொகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை பெற்றுள் ளோம்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x