Published : 23 May 2019 09:31 AM
Last Updated : 23 May 2019 09:31 AM

நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா முன்னிலை

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 27,529 வாக்குகள் பெற்று, 9,636 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x