Published : 22 May 2019 07:53 AM
Last Updated : 22 May 2019 07:53 AM

வாக்கு எண்ணிக்கையின்போது கவனமுடன் இருக்க வேண்டும்: அதிமுக முகவர்களுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவுரை 

வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகு திகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுகவினர் மிகவும் கவனத்துடனும், விழிப் புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று அதிமுகவுக்கு அர்ப் பணிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடக்கும் 23-ம் தேதி அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப் படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங் களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்கும்

பதிவான வாக்குகளும், எண் ணிக்கையில் காட்டப்படும் வாக்கு களும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும்போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத் தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக் கொண்டு அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும்.

அதற்குப் பிறகுதான் அடுத்த சுற்று வாக்கு எண் ணிக்கை நடக்கும்படி பார்த் துக் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும், மாற்றுக் கட்சியினருக்கு ஆதர வாகவும் முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதி காரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வை காண வேண்டும்.

தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பதை நாடே அறியும். எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என் பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

இன்றியமையாத பணி

அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் நியமிக்கப் பட்டுள்ள முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவ டைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியில் வரவேண்டும்.

அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது ஜன நாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றி யமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x