Published : 19 May 2019 04:25 PM
Last Updated : 19 May 2019 04:25 PM

அரவக்குறிச்சியில் தொடர்ந்து அதிக வாக்குப்பதிவு: 3 மணிநிலவரப்படி 66.38%

சட்டப்பேரவை இடைத்  தேர்தலில் அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 3 மணிநிலவரப்படி 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்து முடிந்தது. உறுப்பினர்கள் மறைவு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக காலியாக இருந்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

இதையடுத்து இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்றது. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பாக பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதால் 4 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் பிரச்சாரம் முடிவடைந்தது.

 

இதையடுத்து, 4 தொகுதிகளுக்கு உட்பட்ட 1,128 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு விவரம் நிலவரம் வெளியாகியுள்ளது.

 

3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

 

 சூலூர் - 58.16%

அரவக்குறிச்சி - 66.38%

திருப்பரங்குன்றம் - 56.25%

ஒட்டப்பிடாரம் - 52.17%

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x