Published : 22 Apr 2019 07:24 PM
Last Updated : 22 Apr 2019 07:24 PM

களவாணி-2 திரைப்படம் வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

களவாணி2 திரைப்படத்தை ஜூன் 10 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓவியா, நடிகர் விமல் நடிப்பில் வரும் மே 4 ம் தேதி வெளியாக இருக்கும் களவாணி 2 திரைப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த  ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றிருந்தது.

இந்த உரிமையை மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க 3 கோடி  ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த ஒப்பந்த விதிகளை ஒப்பந்தம் செய்து கொண்ட மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் கியூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்திற்கு சில நிறுவனங்களின் பங்களிப்போடு களவாணி 2 படத்தை வெளியிடும் உரிமையை தமிழகம், புதுவையில் வழங்கியுள்ளது.

இவ்வாறு படம் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தை மீறி விதிமீறல்கள் நடந்துள்ளதால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும். களவாணி2 படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒ.குமரன் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் 10 ம் தேதி வரை களவாணி-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கில் மெரினா பிக்சர்ஸ், ஏ3வி சினிமாஸ், வருமன்ஸ் ப்ரோடெக்சன்,  ஜெமினி எஃப் எக்ஸ், கியூப் சினிமா டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x