Published : 20 Apr 2019 09:21 PM
Last Updated : 20 Apr 2019 09:21 PM

புகழ்பெற்ற எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ். முத்தையா காலமானார்

சென்னை மாநகரத்தைப் பற்றிய அரசியல், பண்பாட்டு வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமான எஸ். முத்தையா காலமானார், இவருக்கு வயது 89.

 

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டில் பிறந்தார் முத்தையா. இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். 1951-ல் டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

 

சென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

தற்போது சென்னையில் வசித்துவந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் மெட்ரோ பிளஸ் இணைப்பிதழுக்கு சென்னை பழைய வரலாறு பற்றிய கட்டுரைகளில் பெரிய பங்களிப்பைச் செய்தவர்.

 

சென்னை மாநகரைப் பற்றிய வரலாற்றில் புதைந்து கிடக்கும் விஷய செல்வங்களை வாசகர்களுக்கு அளித்த பெரிய எழுத்தாளர், வரலாற்று எழுத்தாளர் முத்தையா.

 

மெட்ராஸ் டிஸ்கவர்டு என்ற இவரது புத்தகம் 1981ல் வெளியானது. அதன் பிறகு இதன் புதுப்பிக்கப்பட்ட ‘மெட்ராஸ் ரீ டிஸ்க்வர்டு’ என்ற நூல் வெளியானது, இன்று வரை சென்னையைப் பற்றி விவரம் வேண்டுமா அதற்கு ஒரே ஸ்காலர் எஸ்.முத்தையா எழுதிய நூல்கள்தான் என்பதற்கு இந்த இரண்டு நூல்களும் சான்றாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x