Published : 07 Apr 2019 12:46 PM
Last Updated : 07 Apr 2019 12:46 PM

ஹாட்லீக்ஸ் : பை வந்து சேர்ந்துச்சா..?

சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஒருவர், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே உஷாராகிவிட்டாராம்.

குறிப்பிட்ட சில ஏரியாக்களில். வேட்டி, சட்டை, புடவை, மளிகைப் பொருட்கள், கரன்சி கவர் அடங்கிய கிஃப்ட் பேக்கை ‘மரம் வளர்ப்போம்’ என்று எழுதப்பட்ட பையில் போட்டு 15 நாட்களுக்கு முன்னதாகவே வீடு வீடாய் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டாராம்.

இப்போது தொகுதிக்குள் பிரச்சாரம் போகும்போது, “மரம் வளர்ப்போம் பை வந்து சேர்ந்துச்சா?” என்று சங்கேத பாஷையில் கேட்டு உறுதிப்படுத்தி வருகிறார்களாம் வேட்பாளரின் விசுவாசிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x