Published : 27 Mar 2019 06:32 AM
Last Updated : 27 Mar 2019 06:32 AM

மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்துக்கு திமுக எதையும் செய்யவில்லை: சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு 

மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக, தமிழ்நாட்டுக்காக எதையும் செய்யவில்லை.என்று முதல்வர் கே.பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சென்னையில் தனது 2-வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கினார். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை, சூளை, அயனாவரம், டி.பி.சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் பழனிசாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில் பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி பேசிய தாவது: திமுக ஊழல் செய்யாத கட்சி என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர்ஊராகச் சென்று பொய் பேசி வருகிறார்.

ஊழலுக்காகவே திமுக ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. அப்படி இருக்கும்போது எங்களைப் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?

வீராணம் திட்டத்துக்கான குழாய்களே திமுக ஊழல் பற்றி பறைசாற்றும். இத்திட்டத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி னார்கள். முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், புதிய வீரா ணம் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக, தமிழ் நாட்டுக்காக எதையும் செய்ய வில்லை. அந்தக் காலகட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியவை என்ன ஆனது? அதனால்தான் திமுக தேர்தல் அறிக்கையை பொய்யான அறிக்கை என்று கூறுகிறோம்.

2011-ம் ஆண்டு அதிமுக தேர் தல் அறிக்கையில் கூறிய அனைத் தையும் முதல்வர் ஜெயலலிதா நிறை வேற்றினார். ஏழைப் பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஏழை மாணவ, மாணவி யருக்கு விலையில்லா மடிக் கணினி உள்ளிட்ட திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன.

சென்னையில் 2005-ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித் தார். பிறகு 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக இத்திட் டத்தைக் கொண்டு வந்து, அப் படியே விட்டுவிட்டு போய்விட்டனர். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந் ததும் முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை விரைவுபடுத்தி, இப்போது முதல்கட்ட வழித் தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது இரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கியுள்ளோம். இதற்காக ரூ.79,000 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள் ளது. இந்த அனுமதி கிடைத்ததும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கும்.

118.90 கிமீ தூரத்துக்கு பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன. சிறுசேரி முதல் மாதவரம் வரை யிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெறவுள்ளன. இத்திட்டங்கள் நிறைவேறும்போது சென்னை யில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்.

சென்னை மாநகரில் எலக்ட்ரிக் பேருந்து விரைவில் விடப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகர மக்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தை நீதிமன்ற தடை ஆணை மூலம் தடுத்து நிறுத்த திமுக திட்டமிட்டது. அது நடக்கவில்லை. தேர்தல் வந்து விட்டதால், இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்து திமுக நிறுத்தி வைத்துள்ளது. தேர்தல் முடிந்ததும், அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும்.

சென்னை மாநகரில் வீடு இல்லாத ஏழைகளுக்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். மத்தியில் நிலை யான ஆட்சியும், வலிமையான பிரதமரும் வருவதற்கு அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் சாம் பாலுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x