Published : 23 Mar 2019 04:18 PM
Last Updated : 23 Mar 2019 04:18 PM

தாம்பரம் விமானப்படை விமானம் மாயமானதா? திடீர் பரபரப்பு

தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்குச் சென்ற விமானம் மாயமானதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் மேலும் பரபரப்பானது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் அதைத்தொடர்ந்து பாக்.விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தன் பாராசூட்டில் குதித்தார். பின்னர் ராணுவத்திடம் சிக்கிய அவர் மீட்கப்பட்டார்.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தீப்பிடித்து வீழ்ந்த விமானம், பாராசூட்டில் குதிக்கும் விமானி போன்ற அசாதாரண சம்பவங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற ஒத்திகை இன்று நடந்தது.

கிழக்கு தாம்பரம் பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இன்று பகல் 1.30 மணி அளவில் பயிற்சிக்காகச் சென்ற விமானம் தரையிறங்க முடியவில்லை என விமானி விமானப்படைத்தளக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

அவரது தகவலின் அடிப்படையில் விமானப்படை அதிகாரிகள் விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள காவல் நிலையங்கள், தீயணைப்புத் துறை, பேரிடர் துறை போன்றவற்றுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

காவல் நிலையத்துக்கு வந்த தகவலை அரைகுறையாக புரிந்துகொண்ட ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் தர, சில ஊடகங்களில் உடனடியாக தாம்பரம் விமானப்படை விமானம் மாயம் என செய்தி வெளியானது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக செய்தியாளர்கள் தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானங்களை வழிமறித்து சுட்டுத் தள்ளிய விங் கமாண்டர் அபிநந்தன் விமானம் தாக்கப்பட்டு அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் தரையிறங்கினார்.

அதுபோன்ற  அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக விமானிகளை எப்படி மீட்பது கட்டுப்பாட்டு அறையில் மூலம் விமானி விழுந்த இடத்தின் அருகிலுள்ள காவல் நிலையம் தீயணைப்பு துறை , சுகாதாரத்துறை, வருவாய் நிர்வாகத்துறை போன்றவற்றுக்கு எப்படி தகவல் அனுப்புவது என பயிற்சி ஒத்திகை நடைபெற்றதது என்று தெரிவித்தனர்.

ஒத்திகை மட்டுமே நடைபெற்றது. விமானப்படை விமானம் மாயமா? இல்லையா என்பதை விமானப்படை அதிகாரிகள்தான் உறுதிப்படுத்தவேண்டும். எங்களிடம் விசாரித்திருந்தால் தகவல் சொல்லியிருப்போம் என்று தெரிவித்தனர். ஏற்கெனவே ஆப்ரேஷன் ஆம்லா விவகாரத்தில் விமானம் மாயமாகி பின்னர் கடலில் விழுந்தது தெரியவந்தது.

இந்நிலையில் இதுபோன்ற தகவலால் சென்னையில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x