Published : 23 Mar 2019 08:22 AM
Last Updated : 23 Mar 2019 08:22 AM

முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், யெச்சூரி, விஜயகாந்த் உட்பட கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது

அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் செலவின விலக்கு பெறுவதற்காக தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை யிலான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளன.

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக, அரசியல் கட்சிகளால் செலவிடப்படும் தொகை, வேட்பாளர்களின் செலவு கள் ஆணையத்தால் கண்காணிக் கப்படுகின்றன. மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம், சட்டப்பேரவை தேர்தலில் ரூ.28 லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டும்.

அதேநேரம், வேட்பாளர்களுக் காக பிரச்சாரம் செய்யும் தலை வர்களை நட்சத்திர பேச்சாளர் களாக கருத்தில் கொள்ளப்பட்டு அவர்களின் செலவுகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. அந்த வகையில், அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும் மற்ற கட்சிகள் 20 பேரையும் பரிந்துரைக்க லாம் என்பதால் நட்சத்திர பேச்சாளர் கள் பட்டியல் தேர்தல் அதிகாரியிடம் கட்சிகளால் அளிக்கப்பட்டுள்ளன.

இதில், அதிமுக சார்பில் அளிக் கப்பட்ட 40 பேர் பட்டியலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல் வர் கே.பழனிசாமி, வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் பொன் னையன், தமிழ் மகன் உசேன், தளவாய் சுந்தரம், வளர்மதி, ஜெ.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா, அன்வர் ராஜா மற்றும் அமைச்சர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ளனர்.

திமுகவின் 40 பேர் பட்டியலில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, ஜி.ராமகிருஷ் ணன், டி.கே.ரங்கராஜன், கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட 40 பேர் பட்டியல் அளித்துள்ளனர்.

தேமுதிக சார்பில் அதன் தலை வர் விஜயகாந்த், பிரேமலதா விஜய காந்த், எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்ட 40 பேரும் மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்ட 20 பேர் பட்டியலும் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் தலைவர் சேதுராமன் உள் ளிட்ட 12 பேரும் புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 20 பேரும் அடங்கிய பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பாரிவேந்தர் உட்பட 10 பேர் அடங்கிய பட்டியலும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் டி.தேவேந்திர யாதவ் உள்ளிட்ட 20 பேர் பட்டியலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இ.ஆர்.ஈஸ்வரன் உட்பட 20 பேரும் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம நாராயணன் உட்பட 7 பேர் அடங்கிய பட்டியலும் நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும், பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள் ளிட்ட கட்சிகள் பட்டியலை அளிக்க வில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x