Published : 23 Mar 2019 08:20 AM
Last Updated : 23 Mar 2019 08:20 AM

சிறு, குறு வணிகர்களின் பணத்தை பறிப்பதா?- பணப்பரிமாற்ற உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் விக்கிரமராஜா மனு

தேர்தல் நேரத்தில் சிறு குறு வணிகர் களின் ரொக்கப் பரிவர்த்தனைக் கான உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் பேரமைப்பு நிர்வாகிகள், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பல லட்சம் வணிகர் கள் அன்றாட வாழ்வுக்காக காய்கறி, பழங்கள், பால் மற்றும் விவசாய விளைபொருட்கள் போன்றவற்றை விற்று வருகின்றனர். குறிப்பாக இவர்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராதவர்கள். தேர்தல் பறக்கும் படை நடத்தை விதிகளை காரணம் காட்டி, சிறு குறு விவசாயிகள் கொண்டு செல்லும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து, அவர்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை ஏற்க முடியாது. சிறு குறு வணிகம் நடக்கும் இடங்களிலேயே பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

அரசியல் நோக்கில் எடுத்துச் செல்லப்படும் தொகைகள் பெரும் பாலும் பறிமுதல் செய்யப் படுவதில்லை.

எனவே, அரசியல் நோக்கில் எடுத்துச் செல்லப்படும் தொகை களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டும். வணிக தொடர்புடைய பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அதிகாரிகளுக்கு அறி வுறுத்த வேண்டும். மேலும், தேர் தல் ஆணையரகம் அறிவித்துள்ள பணப்பரிமாற்றம் செய்ய உச்ச வரம்பு ரூ.50 ஆயிரம் என்பது இன்றைய காலச்சூழலுக்கு ஏற்பு டையதல்ல. குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் வரை சில்லறை மற்றும் சிறு குறு விவசாயிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x