Published : 23 Mar 2019 07:34 AM
Last Updated : 23 Mar 2019 07:34 AM

ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் இலங்கையில் ரூ.26,000 கோடி முதலீடு?

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிங்கப் பூர் நிறுவனம் மூலமாக இலங்கை யில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (ரூ.26,000 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (தோராயமாக ரூ.26000 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவித் தது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ள நிறுவனம் ஆகும்.

அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத் ரட்சகன்  நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட் பாளருமான ஜெகத்ரட்சகனின் மகன்,  நிஷா அவரது மகள், அனு சுயா அவரது மனைவி ஆவார்.

70 சதவீத நிதி

இந்த மூவரையும் இயக்குநர் களாகக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண் ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த வர்த்தக திட்டத்தில் 70 சதவீத நிதியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் எஞ்சிய தொகையான 2000 மில்லியன் டாலர் நிதியை அந்நிறுவனம் கடன் மூலமாக திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இலங்கை அதிகாரி தகவல்

‘‘சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்திய வர்த்தக தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியும். இதுதொடர்பான ஆவணங்களில் ஜெகத்ரட்சகன் என்பவர் கையெழுத் திட்டுள்ளார்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதலீட்டில் இந்திய வர்த்தக தொடர்பு இருப்பது குறித்து இலங்கை முதலீட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவிவ்லை. இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு குறித்த பொதுவான தகவலை மட்டுமே இலங்கை முதலீட்டு வாரியம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட் டது.

ஓமன் அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் மற்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டு நிதியுதவியோடு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வர்த்தக திட்டத்துக்கான பணிகள் வெகுவிரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே (புதன்கிழமை) இந்த திட்டத்தில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று ஓமன் எண்ணெய் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இத்தகைய சூழலில் இலங்கை முதலீட்டு அமைச்சகம் ஓர் விளக்கத்தை வெளியிட்டது.

அதில், ‘‘எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் பங்குகள் தொடர்பாக ஓமன் எண்ணெய் அமைச்சகத்துக் கும் சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத் தாகவில்லை என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்படும் என்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் வாரியத்திடம் நம்பிக்கை அளித்துள்ளது’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஜெகத்ரட்சகன் விளக்கம்

இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘இதில், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. இப்போதுதான் விண்ணப்பித் திருக்கிறோம். அதன் மீது அரசு பரிசீலனை செய்து வருகிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x