Published : 21 Mar 2019 08:26 PM
Last Updated : 21 Mar 2019 08:26 PM

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது: கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. பல மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலுடன் தமிழகப் பட்டியலும் வெளியானது.

மக்களவைத் தேர்தல் 2019-க்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மோடி, அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட 184 வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக போட்டியிடுகிறது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் ஏற்கெனவே தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் , சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. பாஜக வேட்பாளர்கள் பட்டியலை எச்.ராஜா நேற்றே அறிவித்து பின்னர் பின்வாங்கினார்.

இந்நிலையில் எச்.ராஜா அறிவித்த அதே பெயர்களே வெளியாகி உள்ளது.

பாஜக வெளியிட்ட பட்டியல்:

  1. கன்னியாகுமரி தொகுதி - மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
  2. தூத்துக்குடி தொகுதி - தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவர்
  3. கோவை தொகுதி – சி.பி.ராதாகிருஷ்ணன்
  4. சிவகங்கை - எச்.ராஜா
  5. ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்

இதில் கன்னியாகுமரி, சிவகங்கை தொகுதிகளில் காங்கிரஸை எதிர்த்தும், தூத்துகுடியில் திமுகவை எதிர்த்தும், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும், ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக்கை எதிர்த்தும் களம் காண்கிறது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x