Published : 21 Mar 2019 06:36 AM
Last Updated : 21 Mar 2019 06:36 AM

விடைத்தாள் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் 37 பேர் பணிநீக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை

பொறியியல் தேர்வு விடைத்தாள் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் 37 பேரை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 580-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக் கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப் பட்ட செமஸ்டர் தேர்வு மறுமதிப்பீட் டில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டு அதற்கு உடந்தை யாக இருந்ததாக அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா மற்றும் 10 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.

மறுமதிப்பீட்டு முறைகேடு களைப் போல் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் செமஸ்டர் தேர்வு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற்ற சிறப்பு அரியர் தேர்வில் மிகப்பெரிய அள வில் விடைத்தாள் மோசடி நடந் திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, இந்தச் சம் பவம் குறித்து விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் மூத்த பேரா சிரியர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், விடைத்தாள்களை மாற்றி மோசடி நடந்திருப்பதாகவும், அதற்கு தற் காலிக பணியாளர்கள் உடந்தை யாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டி யிருந்தது.

இந்நிலையில், விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து கடந்த பிப். 6-ம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டு முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த தற்காலிக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிண்டிகேட் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்காலிக பணியாளர்கள் 37 பேரை பணிநீக்கம் செய்து அண்ணா பல் கலைக்கழக பதிவாளர் ஜெ.குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள தற்காலிகப் பணியாளர்கள் அனை வரும் எழுத்தர்கள் மற்றும் அலு வலக உதவியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி நடைபெற்றது எப்படி?

விடைத்தாள் மோசடி சம்பவம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017 நவம்பர், டிசம்பர் தேர்வு மற்றும் 2018 பிப்ரவரி, மார்ச் அரியர் தேர்வில் சில மாணவர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வரப்பெற்றன.

இதைத்தொடர்ந்து, விசா ரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட் டது. அந்த விசாரணையில், விடைத்தாள்களை மாற்றி மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட் டது. தேர்வில் மாணவர்கள் எழு திய விடைத்தாள்கள் இருந்த கட்டு களில் இருந்து குறிப்பிட்ட மாண வர்களுக்குரிய விடைத்தாள்கள் தற்காலிக ஊழியர்களின் உதவி யுடன் வெளியே எடுக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது 3-வது நபரால் வேறொரு அறையில் இருந்து விடைகள் எழுதப்பட்டு மீண்டும் அவை விடைத்தாள் கட்டுகளுடன் சேர்க்கப்பட்டன.

இதற்காக மாணவர்கள் மற்றும் 3-வது நபரிடமிருந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40,000 வரை பணம் பெறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் 3-வது நபர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு வெற்று விடைத் தாள்களை கொடுத்து தேர்வுக் கூடத்துக்கு வெளியே வைத்து விடைகளை எழுதி வாங்கிக் கொண்டு பின்னர் அதை விடைத் தாள் கட்டுகளில் இணைத்துள் ளனர்.

இந்த முறைகேட்டுக்காக கிடைத்த பணத்தை தற்காலிக ஊழியர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட செமஸ்டர் தேர்வில் வேறு சில முறைகேடுகளிலும் அவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட முக்கியப் பணிகளில் தற்காலிக ஊழியர் களை ஈடுபடுத்தியது ஏன்? என்ற குற்றச்சாட்டு அண்ணா பல்கலைக்கழகம் மீது எழுந் துள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்பை பொறுத்த வரையில் மாணவர்களின் அறிவுத் திறனை மதிப்பீடு செய்யும் வகை யில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக வழங்கப்படும் மதிப் பெண் விவரம் அவர்களது பட்டச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக் கும். எனவே, விடைத்தாள் மதிப்பீடு போன்ற முக்கியமான பணிகளில் நிரந்தர பணியாளர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், சாதா ரணமான பணிகளில் வேண்டு மானால் தற்காலிக ஊழியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x