Published : 20 Mar 2019 04:35 PM
Last Updated : 20 Mar 2019 04:35 PM

மக்கள் நீதி மய்யம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 50% தொழிலதிபர்கள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் 20 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் 50 சதவீதம் தொழிலதிபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரசிகர் மன்றத்திலிருந்து யாரும் வேட்பாளராக இல்லை என்பது தெரிகிறது. 

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

''நாடாளுமன்றத் தேர்தல் – 2019 மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் நமக்கான அரசியல் நமக்கான கட்சி என்கின்ற உயரிய நோக்கத்துடன் என்னைப் போல் முன்வைக்கப்பட்டு நமக்கான ஆட்சி அமைக்க வேண்டிஏப்.14  அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் தொகுதிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களாக அறிவித்துள்ளவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்.

கமல் ரசிகர் மன்றத்தை சார்ந்த ஒருவர் கூட இல்லாத வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

 

20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்

1. திருவள்ளூர் (தனி)  - டாக்டர். லோகரங்கன்.

2. வடசென்னை - ஏ.ஜி.மௌர்யா.

3.  மத்திய சென்னை  - கமீலா நாசர்

4. ஸ்ரீ பெரும்புதூர்  - சிவக்குமார்

5. அரக்கோணம் -  என்.ராஜேந்திரன்

6. வேலூர் -  ஆர்.சுரேஷ்

7. கிருஷ்ணகிரி - ஸ்ரீ.காருண்யா

8. தர்மபுரி - ராஜசேகர்

9. விழுப்புரம்  (தனி). – அன்பில் பொய்யாமொழி (நிறுவனர் தலித் முன்னேற்றக் கழகம்)

10. சேலம்- பிரபு மணிகண்டன்

11. நீலகிரி - ராஜேந்திரன்

12. திண்டுக்கல்- டாக்டர் சுதாகர்

13. திருச்சி - ஆனந்தராஜா

14. சிதம்பரம் – டி.ரவி

15. மயிலாடுதுறை- ரிஃபாயுத்தீன்

16 நாகப்பட்டினம்(தனி) - குருவைய்யா

17 தேனி – எஸ்.ராதாகிருஷ்ணன்

18 தூத்துக்குடி – டி.பி..எஸ்.பொன் குமரன்  

19 திருநெல்வேலி- வெண்ணிமலை  

20 கன்னியாகுமரி – ஜெ.எபினேசர்

21 புதுச்சேரி - டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன்

வேட்பாளர் பட்டியலில் சிநேகன், ஸ்ரீபிரியா போன்றோருக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. தென் சென்னைக்கு ஸ்ரீபிரியா நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x