Published : 19 Mar 2019 12:29 PM
Last Updated : 19 Mar 2019 12:29 PM

ராஜகண்ணப்பனை கிண்டல் செய்யப்போய் கலாய்க்கப்பட்ட எஸ்.வி.சேகர்

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பனை கிண்டல் செய்யப்போய் ட்விட்டரில் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று அவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜ கண்ணப்பனின் கொள்கைப் பாதை என ட்விட்டரில் எஸ்.வி.சேகர் ஒரு ட்வீட் பதிவு செய்தார்.

அதில்,

"1991-96- அதிமுக அமைச்சர்

2000 - மக்கள் தமிழ் தேசம்

2006 - கட்சி கலைப்பு

2006 - திமுக

2009- திமுக எம்.எல்.ஏ வாக அதிமுக தாவல் 

2016- தீபா அணி

2017- ஓபிஸ் அணி

2017- ஒருங்கிணைந்த அதிமுக

2019- மீண்டும் திமுக

2021.-⁉️⁉️" என அவர் பதிவிட்டார்.

ஆணால் கிண்டல் செய்ய அவர் பதிவு செய்த ட்வீட் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. உங்கள் பாதை என்ன என கேட்க நெட்டிசன்கள், எஸ்.வி.சேகர் அதிமுக, காங்கிரஸில் இருந்துவிட்டு பின்னர் பாஜகவுக்கு வந்ததை சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் மீம்ஸ் போட்டும் அவரைக் கிண்டல் செய்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x