Published : 18 Mar 2019 05:27 PM
Last Updated : 18 Mar 2019 05:27 PM

வாரிசு என்பதற்காக வாய்ப்பை மறுக்க வேண்டியதில்லை: கனிமொழி

 

 

வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தேர்தலில் வாய்ப்பை மறுக்க வேண்டியதில்லை என்று கருணாநிதியின் மகளும் தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக அண்ணா நகரில் உள்ள மதிமுக தலைவர் வைகோவின் வீட்டுக்குச் சென்று கனிமொழி வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய வைகோ,''இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து, திமுகவுக்குப் பெருமை சேர்த்தவர் கனிமொழி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி போட்டியிடுகிறார். சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவார். மக்களவையில் கனிமொழியின் திராவிடக் குரல் ஒலிக்கும். என்னுடைய தேர்தல் பரப்புரையைத் தூத்துக்குடியில்தான் தொடங்குகிறேன்'' என்றார் வைகோ.

 

திமுகவில் வாரிசுகளுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ''தொடர்ந்து திமுவில் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்றும் இல்லை'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x