Published : 18 Mar 2019 01:32 PM
Last Updated : 18 Mar 2019 01:32 PM

பொதுத்தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை: செய்தியாளர் சந்திப்பில் கேள்வியை தவிர்த்த கிருஷ்ணசாமி

தென்காசி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்க்கொள்ள முடியாமல்  தடுமாறினார்.

 தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் தேவேந்திரகுல சமுதாயத்தை பட்டியலினத்திலிருந்து வெளியேற்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று கூறியிருந்தார். அப்படியானால் பொதுத்தொகுதியில் நிற்பாரா கிருஷ்ணசாமி என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தனித்தொகுதியான தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார் கிருஷ்ணசாமி இது சர்ச்சையை ஏற்[படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் இந்தகேள்விதான் பிரதானமாக எதிரொலித்தது. அதை கிருஷ்ணசாமி தவிர்த்தார்.

தேவந்திர குல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி விட்டு தனி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவது ஏன்?

இந்த தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இதை வலியுறுத்துவேன்.

பொது தொகுதி கூட்டணியில் வாங்கியிருந்தாலே  உங்களுடைய கோரிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றி இல்லையா?

வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை கேட்டு வாங்கியுள்ளோம்.

அப்படியானால் நீங்கள் பொதுத்தொகுதியை கேட்கவில்லையா?

இல்லை நான் தென்காசி தொகுதியைத்தான் கேட்டேன். அது மிகவும் பின்தங்கிய தொகுதி. எனக்கு பரிச்சயமான தொகுதி என்பதால் கேட்டேன்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கூறியது என்னவாயிற்று?

இந்த கேள்வி இப்போது தேவையில்லை

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை உரிய இழப்பீடு என்ற உங்கள் கோரிக்கை நிறைவேறி விட்டதா?

வேறு கேள்வி கேளுங்கள்.

உங்களுக்கு ஒரு சீட்டு பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் நீங்கள் கூட்டணி மாறுவதாக ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கபடுகிறதே?

உங்களை யார் இந்த கேள்வி கேட்க சொன்னார்களோ , அவர்களும் கூட்டணி மாறி மாறி தான் உள்ளனர்.

இந்த கேள்வியே சாமனிய மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கிறார்கள் . அதை தான் நாங்கள் கேட்கிறோம்?

அதற்கு பதிலளிக்காமல், தேவேந்திரகுள மக்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து என்னென்ன கோரிக்கைகள் இருந்தது என்னென்ன நிறைவேற்றினோம் என பட்டியலிட்டார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள்,

நீங்கள் 2010-க்குப் பிறகும், 2011-ல் எல்.எல்.ஏ ஆன பிறகும் தேவேந்திர குல மக்களுக்காக என்னென்ன செய்தீர்கள்? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கிருஷ்ணசாமி மதுரைக்கூட்டத்தில் தேவந்திர குல வேளாளர் மக்களை பற்றி மோடியையும், அமித்ஷாவையும் பேச வைத்தேன் அதுவே பெரிய சாதனை தான் எனத்தெரிவித்தார்.

பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ,அதே பரமக்குடி மண்ணில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போகிறீர்களா?

பதிலளிக்காமல் கேள்வியை தவிர்த்துச் சென்றுவிட்டார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x