Published : 17 Mar 2019 07:21 PM
Last Updated : 17 Mar 2019 07:21 PM

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக  வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: அதிகமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக கடிதம் கொடுத்ததாக கொறடா அளித்த புகாரில் சட்டப்பேரவைத்தலைவர், அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர் உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு நீக்கம் உறுதியானது.

அவர்கள் நீக்கத்தால் 18 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று திருவாரூர் எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை ஒட்டி இரு தொகுதிகளும், ஓசூர் சட்டப்பேரவைத் உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்புக் காரணமாக அந்த் தொகுதியும் சேர்ந்து 21 தொகுதிகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியானது. ஆனால், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையே இடைத்தேர்தல் நடக்க உள்ள 18 தொகுதிகளுகளுக்கான வேட்பாளர்  பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் பெரும்பகுதியான வேட்பாளர்கள் புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரம் வருமாறு:

1)  பூந்தமல்லி (தனி) - ஆ. கிருஷ்ணசாமி, பி.எல்.,

2)  பெரம்பூர் - ஆர்.டி.சேகர், பி.காம்., பி.எல்.,

3)  திருப்போரூர் - செந்தில் (எ) எஸ்.ஆர்.இதயவர்மன், பி.ஏ.,

4)  சோளிங்கர் - அ. அசோகன், பி.ஏ.,

5)  குடியாத்தம் (தனி) - எஸ். காத்தவராயன்

6) ஆம்பூர் - அ.செ. வில்வநாதன்

7)  ஓசூர் - எஸ்.ஏ. சத்யா

8)  பாப்பிரெட்டிபட்டி - ஆ. மணி, பி.காம்., பி.எல்.,

9)  அரூர் (தனி) - செ. கிருஷ்ணகுமார், பி.இ., (சிவில்)

10)  நிலக்கோட்டை (தனி) - சி.சௌந்தரபாண்டியன், பி.ஏ., பி.எல்.,

11)  திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன்

12)  தஞ்சாவூர் - டி.கே.ஜி. நீலமேகம்

13)  மானாமதுரை (தனி) - கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன், எம்.ஏ., பி.எச்டி.,

14)  ஆண்டிபட்டி - ஏ. மகாராஜன்

15)  பெரியகுளம் (தனி) - கே.எஸ். சரவணகுமார், பி.இ., எம்.பி.ஏ.,

16)  பரமக்குடி (தனி) - ச.சம்பத்குமார், எம்.பி.ஏ.,

17)  சாத்தூர் - எஸ்.வி. சீனிவாசன், பி.காம்.,

18) விளாத்திகுளம் - ஏ.சி. ஜெயக்குமார்

இவ்வாறு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x