Published : 14 Mar 2019 05:17 PM
Last Updated : 14 Mar 2019 05:17 PM

தேர்தல் முடியும் வரை வரிவசூல் செய்யக்கூடாது: உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு ஆளும்கட்சியினர் நெருக்கடி

மக்களவைத்தேர்தல் முடியும் வரை பொதுமக்களிடம் வரிவசூலுக்காக நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளின்அதிகாரிகளுக்கு ஆளும்கட்சியினர் தடைபோட்டுள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் தற்போது தீவிர வரிவசூல் நடக்க வேண்டிய நேரம்.

மார்ச் மாதத்திற்குள் முடிந்தளவு உள்ளாட்சி அமைப்புகள், முடிந்தளவுவியாபாரிகள், பொதுமக்கள், கல்வி நிறுவங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பார்கள்.

வரியை கட்டாதவர்கள், வீடுகளில் குடிநீர் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, கடைசியில் அந்த கடைகளைஅடைத்து அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைப்பார்கள்.

அதனால், மார்ச் மாதம் இறுதிக்குள் ஒரளவு 80 சதவீதம் வரிவசூல் இலக்கை உள்ளாட்சி அமைப்புகள் எட்டிவிடும். ஆனால், தற்போது ஏப்ரல-18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், உள்ளாட்சிஅமைப்பு அதிகாரிகளால் தற்போது தீவிர வரிவசூலில் ஈடுபட முடியவில்லை. ஆளும்கட்சியினர், அதிகாரிகளிடம் தேர்தல் முடியும் பொதுமக்கள், வியாபாரிகளிடம் கட்டாயப்படுத்தி வரிவசூலில் ஈடுபடக்கூடாது என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அதனால், உள்ளாட்சி அமைப்பினர், தற்போது பொதுமக்கள்,வியாபாரிகள் அவர்களாகவே வழங்கும் வரியை மட்டும் வசூல் செய்து வருகின்றனர். அதனால், உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றிலும் கோடிக்காண ரூபாய் வரிபாக்கி நிலுவையில் உள்ளதால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களின் குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வளர்ச்சிப்பணிகளை கூட மேற்கொள்ள முடியாத அபாயம் ஏற்படும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் ரூ.383 கோடி பாக்கி மதுரை மாநகராட்சியில் ஏற்கணவேவரிவசூல் மந்தமாக இருந்தது. அதனால், இந்த மார்ச் மாதத்தை இலக்காக வைத்து பாக்கி வைத்திருப்பவர்களிடம் நோட்டீஸ் கொடுத்து நடடவடிக்கை எடுத்து வரி வசூல் செய்யலாம் என்று மாநகராட்சிஅதிகாரிகள் எதிர்பார்த்தினர். ஆனால், ஆளும்கட்சியினர் வரிவசூலை தேர்தல் முடியும் வரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நெருக்கடி கொடுத்துவிட்டனர்.

அதனால், கடந்த ஒரு ஆண்டில் ரூ. 150 கோடி ரூபாய் மட்டுமே வரிவசூலாகியுள்ளது. வசூலாகாமல் ரூ.383 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. தற்போது அதற்குள் பட்ஜெட் தாக்கல் செய்து அடுத்த நிதியாண்டில் (2019-2020) வரிவசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாக்கியை வசூல்செய்து அதையும் வசூல் செய்வது பெரும் சிரமம். அதனால், மாநகராட்சியில் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முன்பு போல் கடைகள் அடைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடைகளை அடைப்பதில்லை. நோட்டீஸ் கொடுக்கிறோம். ஆளும் கட்சியின் கூறி விட்டதால்  நெருக்கடிகொடுப்பதில்லை, ’’  என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x