Published : 14 Mar 2019 11:15 AM
Last Updated : 14 Mar 2019 11:15 AM

சலோ சவாரி... கார் பிரியர்கள் குஷி!

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் இயங்கத் தொடங்கி 25 ஆண்டுகளாகிவிட்டது. இதையொட்டி, இந்தக் காரை இயக்கிப் பார்க்க கோவை கார் பிரியர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தது இந்த நிறுவனம்.

1886-ல் ஜெர்மனியில் உருவான இந்தக் கார், உலகின் பழமையான மற்றும் பாரம்பரியம் மிக்க கார்களில் ஒன்றாகும். 1994-ல் இந்தியாவில் இந்தக் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. கோவையில் இந்த விழாவைக் கொண்டாடும் வகையில், கார் பிரியர்கள் இந்தக் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.  `லக்ஸ் டிரைவ் லைவ் 2019’ என்ற பெயரில், கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் பந்தய மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் 11 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், ஏராளமான கார் பிரியர்கள், மெர்சிடிஸ் காரை ஓட்டி மகிழ்ந்தனர். மேலும், சமமற்ற, கரடுமுரடான, செங்குத்தான பாதைகளிலும் இந்தக் கார் வேகமாகச் செல்லும் என்பதை, செயல்முறையுடன் விளக்கம் அளித்தனர். நாட்டின் சிறந்த சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் இதில் பங்கேற்றார், வாடிக்கையாளர்களுடன் தனது சமையல் கலை தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், எம்டிவி-ன் இசைக்  கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் சுவெங்க் கூறும்போது, “தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில்,  கோவை மிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியாவில் 5-வது நிகழ்ச்சியாகும். செல்ப் டிரைவ் பிரிவில்,  எங்களின் எஸ்யூவி உள்ளிட்ட அனைத்து விதமான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் இடம் பெற்றிருந்தன.  மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி, செடான் உள்ளிட்ட கார்களை ஓட்டுவதற்கான வாய்ப்பு, கார் பிரியர்களுக்கு அளிக்கப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x