Published : 23 Feb 2019 08:46 AM
Last Updated : 23 Feb 2019 08:46 AM

கோடை வெப்பத்தால் பெட்ரோல் டேங்க் வெடிக்குமா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

கோடை வெப்பத்தால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை இன்றி வறண்ட வானிலை நிலவி வருகிறது. வானத்தில் மேகமூட்டமும் இல்லை. இதன் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் காலங்களில்...

இருப்பினும் கத்திரி வெயில் அளவுக்கு வெப்பம் உயரவில்லை. தற்போது பல நகரங்களில்35 டிகிரி செல்சியஸ் அளவிலேயே அதிகபட்ச வெப்பநிலைஉள்ளது. கத்திரி வெயில் காலத்தில் சுமார் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக வாகனங்களின் பெட்ரோல் டேங்குகள் குறிப்பாக இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகள் வெடிக் கும் அபாயம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் “தற்போது நிலவும்அதிக வெப்பம் காரணமாக பெட்ரோல் டேங்க் வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளது. பெட் ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பும்போது காற்று சுழற்சிக்கு இடமில்லாத காரணத்தால் பெட்ரோல் சூடாகி, டேங்க் வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பாதி டேங்க் மட்டுமே பெட்ரோல் நிரப்பவும். இது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான தகவல் இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது முற்றிலும் தவறான தகவல். இப்படி ஒரு தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை. இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iocl.com-ஐ பார்க்கலாம்’’.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x