Published : 21 Feb 2019 10:15 AM
Last Updated : 21 Feb 2019 10:15 AM

உலகத் தாய்மொழி தினம் அனுசரிப்பு: தமிழை போற்றி பாதுகாக்க பாடுபடுவோம் - முதல்வர் பழனிசாமி அழைப்பு

உலக தாய்மொழி தினத்தில், நம் தாய்மொழியான தமிழை போற்றி பாதுகாத்து வளர்க்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மக்கள் தங்கள் தாய்மொழிகளை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாகவும் சீரிளமை குன்றாத மொழியாகவும் வளமை யும் தூய்மையும் மிக்க மொழி யாகவும் மொழிக்கு மட்டுமின்றி வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும் உலக மொழிகள் அனைத்திலும் தொன் மைமிக்க மொழியாகவும் விளங்கும் தமிழ் மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

விருதுகள் வழங்கி கவுரவிப்பு

தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வளம் சேர்க்கும் வகையில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை போற்றிச் சிறப்பிக்கும் வகையில் தமிழறிஞர்கள், புலவர்கள் பெயர்களில் பல் வேறு விருதுகளை தோற்றுவித்து ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன், சங்ககாலப்புலவர்களை நினைவுகூரும் விதமாக தமிழ்க் கவிஞர் நாளாக கொண்டாடப்படும் ஏப்ரல் 29-ம் தேதி அப்புலவர்களின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து மலர்தூவி சிறப்பு செய்யப்படுகிறது.

மேலும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டபோது தமிழகத்தின் எல்லையைக் காக் கும் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லைக்காவலர்களுக்கு மாதந் தோறும் ரூ.4,500 உதவித்தொகை மற்றும் மருத்துவப்படி ரூ.500-ம் வழங்கப்படுகிறது. எல்லைக் காவலர்களின் மரபுரிமையர் களுக்கு மாதம் ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500-ம், தமிழறி ஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 மற் றும் அவர்கள் மரபுரிமையர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை மற்றும் மருத்துவப்படி ரூ.500 ஆகியவை வழங்கப்படுகிறது.

அகவை முதிர்ந்த தமிழறிஞர் களுக்கும் அவர்களின் மரபுரிமையர் களுக்கும் மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை மற்றும் மருத் துவப்படி ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 1,330 குறட்பாக்களை யும் ஒப்புவிக்கும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கு தல் என பல்வேறு வகையில் தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் களுக்கும் பாடுபடுபவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. உலக தாய்மொழி நாளான இந்த இனிய நாளில், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x