Published : 21 Feb 2019 09:24 AM
Last Updated : 21 Feb 2019 09:24 AM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: நடப்பாண்டு முதலே அமல்படுத்த தமிழக அரசு முடிவு

5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. தேர்வு மையம், வினாத்தாள் தயாரிப்பு உட்பட முன் னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன.

இந்தியா முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாண வர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படு வதாக கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த நாடாளு மன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.

இதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வி யாண்டு இறுதியில் கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தோல்வியடையும் மாணவர் களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர் விலும் மாணவர்கள் தோல்வி யடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த சட்டத்திருத்தத்தை அமல் படுத்த தமிழக அரசு முடிவெடுத் துள்ளது.

தமிழகத்தில் கட்டாயத் தேர்ச் சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப் படும். இடை நிற்றல் உயரும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும். தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல் விவரம்:

நடப்பாண்டு முதல் எல்லா வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 20 மாண வருக்கு ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும். அதற்கு குறை வான மாணவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வேண் டும். அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 5, 8-ம் வகுப்பு மாண வர் எண்ணிக்கையை வட்டார அளவில் பெற்று அதற்கேற்ப தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அதி காரிகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மொத்தம் 60 மதிப்பெண்களுக்கும், 2 மணி நேரமும் தேர்வு நடைபெறும். வினாத்தாளில் 3-ம் பருவத்தில் இருந்து பெரும்பாலான கேள்வி களும், முதல் மற்றும் 2-ம் பருவத் தில் இருந்து பொதுவான கேள்விகளும் கேட்கப்படும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனி யார் பள்ளியில் 5-ம் வகுப்பு மாண வர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ 50-ம், எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விடைத்தாள்கள் குறுவள மைய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மாணவர் எண்ணிக்கை மற்றும் தேர்வு மைய விவரத்தை உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதி காரிகள் கூறும்போது, ‘‘மாணவர் நலன் கருதி தேர்வு மையங்களை 3 கி.மீ தூரத்துக்குள், போக்குவரத்து வசதிகள் எளிதாக இருக்கும்படி அமைக்க முடிவாகியுள்ளது. கல்வியாண்டு இறுதியில் முடி வானதால் பொதுத்தேர்வு குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க போதுமான அவகாசம் இல்லை. எனவே, எளிமையான வினாத்தாள், நெருக்கடி இல்லாத மதிப்பீடு முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதன்படி 5-ம் வகுப்புக்கு மொழிப்பாடங்களின் வினாத்தாளில் வார்த்தை விளை யாட்டு, கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழி சார்ந்த அடிப்படை விஷயங்களை பரிசோதிக்கும் வகையில் கேள்வி களும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவிலான கேள்வித்தாள் அமைக்கப்படும். தேர்வு பணியில் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசி ரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x