Published : 20 Feb 2019 10:01 AM
Last Updated : 20 Feb 2019 10:01 AM

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற பரிசீலனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

“ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்கும்” என, தமிழ செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். 193 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58.65 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலி கருவி, தையல் இயந்திரம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட கருவிகளை வழங்கி அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:

ஸ்டெர்லைட் வழக்கில் வெளியான தீர்ப்பு அரசுக்கோ, அதிமுகவுக்கோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. இது நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்புதான். அரசாணையில் செல்லும் அரசாணை, செல்லாத அரசாணை என்பது கிடையாது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கி, `தமிழக அரசின் அரசாணை செல்லாது’ என்று கூறினர்.

அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு எடுத்த நிலைப்பாடு சரிதான் என்பதை மக்கள் இப்போதாவது புரிந்துகொள்வர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தின் போது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, அரசு பரிசீலனை செய்யும்.

மே 22-ம் தேதி நடந்த சம்பவம் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றார் அமைச்சர்.

தூத்துக்குடி புதுகிராமத்தில் கால்நடை பன்முக மருத்துவ மனையை அமைச்சர் திறந்துவை த்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஜி.பிரேமா, முதன்மை கால்நடை மருத்துவர் சந்தோஷம் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஸ்டெர்லைட் வழக்கில் வெளியான தீர்ப்பு எதிர்பார்த்த தீர்ப்புதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x