Last Updated : 09 Feb, 2019 10:22 AM

 

Published : 09 Feb 2019 10:22 AM
Last Updated : 09 Feb 2019 10:22 AM

வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் புதிய கிரெடிட் கார்டு மூலம் பொருள் கொள்முதல் மோசடி?- சைபர் கிரைம் போலீசில் குவிகிறது புகார்

மதுரை உட்பட பல்வேறு இடங்களில் புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகித்து, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முன்பே கார்டு மூலம் பணம், பொருட்கள் கொள்முதல் மோசடி நடப்பதாக பாதிக்கப்பட்டோர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர்.

டிஜிட்டல் உலகம் என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும் வங்கி ஏடிஎம் கார்டு என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. குறிப்பிட்ட நாட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனைக்கு ‘கிரெடிட் கார்டு’ வைத்திருப்பதும் மார்டனாகி போனது. பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும்போது, ஏடிஎம், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதே பலர் பெருமையாக கருதுகின்றனர்.

வர்த்தக நிறுவனங்களும் சில வங்கி கிரிடிட், ஏடிஎம் கார்டுகளுக்கு சலுகை வாரி வழங்குகிறது. பணம் இருந்தால் மட்டும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாம் என்பதை தவிர்த்து,  சுமார் 40 நாட்களுக்கு வரை  பணமின்றி, பொருட்கள் கொள்முதல் செய்ய வசதி கிரெடிட் கார்டுக்கு உண்டு.

தற்போது கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பை கருத்தில் கொண்டு சில வங்கி நிர்வாகளின் அனுமதியுடன் கிரெடிட் கார்டுகளை விற்க ‘அவுட்சோர்சிங்’ முறையிலான தனியார் ஏஜன்சிகளும் உருவாகின்றன. இவர்களிடம் வாடிகையாளர்களின்  கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்களை செல்கிறது. 

ஏஜென்சிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் கட்டணமின்றி பயன்படுத்தலாம் உள்ளிட்ட சலுகையை கூறி ஆசையை அதிகரிக்கின்றனர். இதில் சிக்கும் நபர்களுக்கு தபாலில் கிரெடிட் கார்டுகள் அனுப்புகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்குள் சிலரது கிரெடிட் கார்டுகளில் பொருட்கள் கொள்முதல் மோசடி நடப்பது சமீபத்தில் அதிகரிக்கிறது என, பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். 

மதுரையை சேர்ந்த அயிலு என்பவர் கடந்த 2 மாத்திற்கு முன், தேசிய வங்கி ஒன்றின் மூலம் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கிறார். அவர் கார்டை சில நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறார். ஒரு மாதம் கழித்து, 15 ஆயிரத்திற்கு பொருட்கள் கொள்முதல் செய்து, உரிய நேரத்தில் பணம் செலுத்தவில்லை.

அபராதத்துடன் செலுத்தவேண்டும் என, வங்கி நிர்வாகத்திடம் தகவல் சென்றிருக்கிறது. அதிர்ச்சியடைந்து அயிலு சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றபோது, ‘‘எங்களுக்கு எதுவும் தெரியாது. கார்டு மூலம் பொருட்கள் கொள்முதல் செய்துள்ளீர்கள். அதற்கான தொகை செலுத்தவேண்டும்’’ என கூறி  இருக்கின்றனர்.

வேறு வழியின்றி அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மேலும், பயன்படுத்தாத கார்டுக்கும் கட்டணம் வசூலிப்பது அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் சைபர் கிரைம் போலீஸாருக்கு வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

சைபர் கிரைம் போலீஸார் கூறியது:

வாடிக்கையாளர்கள் குறித்த தகவல் வங்கி மூலமே வெளியில் தெரிய அதிக வாய்ப்பு. வர்த்தக போட்டியில் சில வங்கிகள் கிரெடிட் கார்டுகள் அதிகளவில் விற்க போட்டி உள்ளது. இதற்கு சில ‘அவுட்சோர்சிங்’ ஏஜென்சிகளை பயன்படுத்துகின்றனர்.  ஏஜன்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் மொபைல் எண்,  விவரங்களை சில வங்கி நிர்வாகம் அளிப்பதாக இதன்மூலம் இடையில் ஒரு கும்பல் இது போன்ற மோசடியில் ஈடுகிறது.

ஏஜென்சிகளும் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது, சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரை சொல்லும்போது நம்புகின்றனர். இது போன்ற தவறுக்கு வங்கிகளே காரணமாக இருந்தாலும், தவறை உணராமல் சைபர் கிரைம் போலீஸார் பக்கம் திருப்பி விடுகின்றனர்.

புகார்களை விசாரிப்பது போலீஸ் கடமை. ஏடிஎம், கிரெடிட் உட்பட ஆன்லைன் மோசடிகளில் ஏமாறாமல் இருக்க, ஒவ்வொரு தனிநபருக்கும் விழிப்புணர்வு தேவை. வங்கி, கூடுதல்  வட்டி, கடன் என்ற பெயரில் போனில் யார் பேசினாலும் பதிலளிக்கக் கூடாது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x