Published : 09 Feb 2019 09:18 AM
Last Updated : 09 Feb 2019 09:18 AM

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்பு: 5 செயல் தலைவர்களும் பொறுப்பேற்றனர்; நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த சு.திருநாவுக்கரசர் மாற்றப் பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2-ம் தேதி நியமிக்கப்

பட்டார். அத்துடன் எச்.வசந்தகுமார், கே.ஜெயகுமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகிய 5 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி வளாகத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் அழகிரியும், 5 செயல் தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னதாக அழகிரி உள்ளிட்ட 6 பேரும் அண்ணா சாலையில் இருந்து திருவிக சாலை (ஜிபி சாலை) வழியாக சத்திய மூர்த்தி பவனுக்கு திறந்த வேனில் ஊர்வலமாக வந்தனர். அவர் களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுயர ரோஜா மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சக்தி திட்டத்தில் 2 லட்சம் பேர்

புதிய தலைவரை வாழ்த்திப் பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், ‘‘தமிழக காங்கிரஸ் யாருக்கும் சளைத்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தலை நிமிர்ந்து நிற்கிறது. எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அழகிரி எனது நண்பர். அவர் நல்ல ஆழமான சிந்தனையாளர். கடந்த 10 நாட்களில் சக்தி திட்டத்தில் 2 லட்சம் பேர் இணைந்துள்ளனர். நான் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் சொத்துகளை மீட்க குழு அமைத்தேன். அந்தப் பணியை புதிய தலைவர் தொடர வேண் டும்.  புதிய தலைவர், செயல் தலை வர்களுக்கு வாழ்த்துகள். எல்லோரும் ஒன்றாக இணைந்து அழகிரி தலைமையில் செயல்படுவோம். இன்று இருக்கும் ஒற்றுமை என்றும் தொடர வேண்டும்'' என்றார்.

நிறைவாகப் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘‘மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாம் அனை வரும் ஒன்றாக கூடியிருக்கிறோம். வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதி களிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்ல வேண்டும். அடுத்த 3 மாதத் தில் ராகுல் காந்தி பிரதமராக வேண் டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க உறுதி யேற்போம்'' என்றார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களான அகில இந்தியச் செய லாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங் கேற்றனர்.

ப.சிதம்பரம் வாழ்த்து

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தமிழக காங்கிரஸ் புதிய தலை வராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரிக்கும், 5  செயல் தலை வர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து  அவர்களுக்கு நம் முழு ஒத்துழைப்பை அளிப்போம்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x