Published : 03 Feb 2019 11:18 AM
Last Updated : 03 Feb 2019 11:18 AM

ரயில்வே திட்டங்களில் தென் மாவட்டங்கள் தொடர் புறக்கணிப்பு; பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் பாதியில் நிற்கும் பணிகள்

பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இரட்டை ரயில் பாதைத் திட்டம் அமைத்து 2 ஆண்டுகளாகியும் மதுரை- சென்னைக்கு புதிதாக ஒரு ரயில் கூட இயக்கப்படாததால், தென் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தவிர நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்ல புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டமும் பாதியிலேயே உள்ளது.

கடந்த காலத்தில் மதுரை- சென்னைக்கு கூடுதல் ரயில் விட தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்தபோது மதுரை-சென்னை வரை ஒரு ரயில் பாதையே இருப்பதால் கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பில்லை என்று ரயில்வே நிர்வாகம் கைவிரித்தது.

தற்போது மதுரை-சென்னை இரட்டை ரயில் பாதை திட்டம், 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. ஆனால், தற்போது வரை ஒரு ரயில் கூட கூடுதலாக இயக்கப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ் சொகுசு ரயில் உயர் வருவாய் பிரிவினரையும், தொழில் அதிபர்களையும் குறி வைத்தே இயக்கப்பட உள்ளது. அதன் கட்டணம் மிக அதிகம்.

தற்போது மதுரை வழியாக சென்னை க்கு வைகை, பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர், அனந்தபுரி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தாலும் சுலபமாக இடம் கிடைப்பதில்லை. அதனால், தென் மாவட்ட மக்கள், சென்னை செல்ல ஆம்னி பஸ்களையே நாட வேண்டி உள்ளது. ஆனால், ஆம்னி பஸ்களின் நிர்வாகங்களும் தொடர் விடுமுறைக் காலங்கள், பண்டிகை காலங்களில் கட் டணக் கொள்ளையில் இறங்குகின்றன.

அதனால், சென்னையில் பணிபுரி வோர், மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு எளிதில் சென்றுவர முடியாமல் தலைநகரிலேயே முடங்கி சொந்த, பந்தங்களை மறந்து வாழும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சேலம், கோவை, திருச்சி, தஞ்சை பகுதிகளில் இருந்து சென்னை க்கு அதிக ரயில்கள் இயக்கப்படுவதால், அவர்கள் எளிதாக செல்கின்றனர்.

புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர் மவுலானா கூறியதாவது: முன்பு கொல்லம்-சென்னை மீட்டர் கேஜ் பாதையில் தினமும் ரயில் இயக்கப்பட்டது. இந் நிலையில், கொல்லம் ரயில் பாதை அகல பாதை பணிக்காக மூடப்பட்டது முதல், கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அந்த ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது கொல்லம் அகல ரயில்பாதை அமைக்கப் பட்டும், அந்த விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.

மதுரை- தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் வழித்தடம் அமைப்ப தாக அறிவித்தும் அத்திட்டம் தொடங்கு வதற்கான அறிகுறியே இல்லை. இந்த திட்டம் அமைந் தால் தூத்துக்குடி மேலும் வளர்ச்சி அடை யும். தற்போது தென்காசி தனி மாவட்டமாக உதயமா கப் போவதாக கூறப்படு கிறது. அதற்கான தகுதி இருந்தும் தென்காசி வழியாக செங்கோட்டை யிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டும் இயக் கப்படுகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வழித் தடம் இல்லாத பகுதியில் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் கவனம் செலுத்துகிறது.

ஆனால், தமிழக அரசும், எம்பிக் களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூடுதல் ரயில்களையும், புதிய திட்டங் களையும் பெற ஆர்வம் காட்ட வில்லை. அதனாலேயே, தமிழகம் ரயில்வே போக்குவரத்தில் பின்தங்கியே செல்கிறது.

அதேநேரத்தில் கேரளா மாநிலத் தில் ரயில்களே செல்ல முடியாத இடத்துக்குக் கூட மலைகளையும், குன்று களையும் குடைந்து புதிய ரயில்பாதை களை அமைத்து அதிக ரயில்களை இயக்கி வருகின்றனர். கேரளாவில் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து அனைத்து பகுதி களுக்கும் செல்ல ரயில் பாதைகள் அமைக்கப்பட் டுள்ளன. அவை இரட்டை ரயில் பாதைகளாக உள்ளன.

அதனால், கேரள மக்கள் கல்வியிலும், வணி கத்திலும் மேம்பட்டு பொரு ளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாகர் கோவில், கன்னியாகுமரி ரயில் நிலை யங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட் டத்துடன் உள்ளன. அதனால், திருவனந்த புரம் ரயில்வே கோட்டம், இந்த ரயில் நிலையங்களில் கிடைக்கும் வருவாயை மட்டும் எடுத்துக் கொண்டு, வளர்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டவில்லை.

திருநெல்வேலியை மையமாகக் கொண்டு கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலியை உள்ள டக்கிய தனி கோட்டத்தை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது மத்திய அரசிடம் அதை கேட்டு பெற தமிழக அரசியல் வாதிகள் முயற்சிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x