Published : 03 Feb 2019 08:44 AM
Last Updated : 03 Feb 2019 08:44 AM

மக்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி: புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் கருத்து

மக்களை மனதில் வைத்து தயாரிக் கப்பட்ட மத்திய பட்ஜெட்டால் எதிர்க் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருப்ப தாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆரோவில் ஆரம்பிக்கப்பட்டு 50-வது ஆண்டு முடிவடைய உள்ளது. கடந்தாண்டு ஆரோவில் விழா வுக்கு பிரதமர் வந்திருந்தார். பொன் விழா நிறைவடையும் முன்பு நான் இங்கு வந்துள்ளேன். நம் நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குழந் தைக்கும் இதுபோன்ற பள்ளியில் படிப்பதற்கான வாய்ப்பு வந்தால் நன்றாக இருக்கும். இங்கு இருக்கக் கூடிய சூழ்நிலை படிப்புக்கு உகந் தது, தனித்தன்மையை வளர்க்கக் கூடியது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி பேச எனக்கு அதிகாரம் இல்லை. மத்திய இடைக்கால பட்ஜெட் மக்களை மனதில் வைத்து போடப்பட்டது. மக்களுக்கு தேவையான உரிமைகளை கொடுக்கக்கூடிய பட்ஜெட். பல நாட் களாக மக்களுக்கு இருந்த கோரிக் கைகளை நிறைவேற்றக்கூடிய பட்ஜெட். இவற்றையெல்லாம் செய்துவிட்டார்களே என்ற ஒரு விதமான அதிர்ச்சியில் எதிர்க் கட்சியினர் பேசுகின்றனர். இந்த பட்ஜெட்டை சட்டத்துக்கு விரோதமானது என்று பல விதமாக கூறலாம். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய உரிமை - கடமை ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது. அதனைத்தான் செய்துள்ளனர்.

சிறு விவசாயிகள் பயன்

பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு கொடுக்கக் கூடிய ஒருவிதமான ஊதியம். அதனை வருவாயாக கொடுக்கிறோம். இதன் மூலம் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் என்ற நம்பிக்கை யில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மாநில அரசு கொடுத்தால், மத்திய அரசு கொடுக்கக்கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை.

தூங்குவதுபோல் நடிப்பு

ரபேல் விமான ஊழல் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பல மேடைகளிலும், மக்களவையிலும் எடுத்துக் கூறியுள்ளேன். அதற்கான எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் இன்றி, சொன்ன பொய்யையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தூங்கிக் கொண்டு இருப்ப வர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவதுபோன்று நாடகம் ஆடு பவர்களை எழுப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஆரோவில் சென்ற அவரை விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன் வரவேற்றார். அங்குள்ள மாத்ரி மந்திர் தியான மையத்தை அவர் பார்வையிட்டார். முன்னதாக, ஆசிரமத்தில் நிர்மலா சீதாராமனை, முதல்வர் நாராயணசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x