Published : 03 Feb 2019 08:09 AM
Last Updated : 03 Feb 2019 08:09 AM

சேலத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை: ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு

சேலத்தில் முதல்வர் பழனிசாமி தலைமை யில் அனைத்துத் துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை யில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொது மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, மின்சார வசதிகள், ரேஷன் பொருட்கள் உள் ளிட்ட அடிப்படை தேவைகள் உரிய நேரத் தில் கிடைக்கப் பெறுவதற்கு முக்கியத் துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு முதல்வர் உத்தர விட்டார்.

மேலும் முதல்வர் பேசும்போது, அனைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி களையும் குறித்த கால அளவில் தூய்மை செய்து, குளோரினேஷன் செய்ய வேண் டும். விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம், விதை, புதியதாக தொடங்கப் படவுள்ள கட்டிடப்பணிகள், ஊரக வளர்ச் சிப் பணிகள், பிரதான சாலை மற்றும் கிராம சாலை பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத் தினார்.

ஆட்சியர் ரோஹிணி, நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஷ்வரன், மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

முன்னதாக ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள பாலங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது: சேலம் மாநகரில் சீர்மிகு நகர திட்டம், மேம்பாலம், சாலை போக்குவரத்து வசதிகள் நிறைவேற்றப் பட்டு வளர்ந்த நாடுகளுக்கு இணையான தாக மாற்றம் பெற்று வருகிறது. சேலத்தில் சகல வசதிகளுடனான ‘பஸ் போர்ட்’ அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தனி யாக ஒரு கிராம சபைக் கூட்டத்தை கூட்டி, அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விமர்சனம் செய்கிறார். இந்த ஆட்சி யில் எதுவும் நடக்கவில்லை என்கிறார். இப்போதுதான் கிராமங்கள் கோயில் என்பதை ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார்.

முதல்வர் பதவியில் இருந்து என்னை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எப்பொழுதும் என்னைப் பற்றி திமுக தலை வர் ஸ்டாலின் நினைத்து கொண்டிருக் கிறார். போராட்டத்தை தூண்டிவிட்டு சூழ்ச்சி செய்து அதிமுக ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற முயற்சியை முறியடித்து, மக்கள் ஆதரவோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

திட்டங்களை தடுக்க முடியாது

தங்கத்துக்கு தாலி வழங்கும் திட்டத்தில் 48,975 பேருக்கு 237.5 கிலோ தங்கம், 8,10,000 மிக்ஸிகள், 73,796 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,874 கோடி வங்கிக் கடன், 270 பேருக்கு ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை வீடுகள் என எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தி, மக்களுக்கான ஆட்சியாக அதிமுக ஆட்சி விளங்கி வருகிறது. ஏழை மக்களுக்கு பொங்கல் போனஸ், ஜெருசலேம், மெக்கா புனித யாத்திரை மேற்கொள்ள உதவித் தொகை என மக்களுக்கான ஏராளமான திட்டங்களை வகுத்து அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நிறுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டு ஸ்டாலின் பேச வேண்டும்.

பொய் பிரச்சாரம்

அரசியல்ரீதியாக எதிர்க்க முடியாத ஸ்டாலின், ஊர் ஊராகச் சென்று பொய் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேண்டு மென்றே திட்டமிட்டு, சில அரசியல் சூழ்ச்சியாளர்கள், இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று முனைந்தால் அவர்கள் எடுக்கின்ற அத்தனை முயற்சியும் தோல்வியில்தான் முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்பி பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடா சலம், சக்திவேல், ஆட்சியர் ரோஹிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x