Published : 25 Jan 2019 09:12 AM
Last Updated : 25 Jan 2019 09:12 AM

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின: 304 நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

தமிழக அரசு சார்பில் 2 நாட்கள் நடத்தப் பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 304 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 10.50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட்டது. இந்த 2 நாள் மாநாடு 23-ம் தேதி தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத் துக்கும் அதிகமான தொழிலதிபர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. மாலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பிர தான முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து, மாநாட்டின் நிறைவு விழா நடந்தது. இதில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்று உரையாற்றினார். விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் வாயிலாக ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.27,400 கோடியும், பேட்டரி கார்களை உற்பத்தி செய்ய ஹுண்டாய் நிறுவனம் ரூ.7 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளன.

எம்ஆர்எஃப் நிறுவனம் தனது பெரம்பலூர், வேலூர் மாவட்ட ஆலைகளை விரிவு படுத்த ரூ.3,100 கோடியும், ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.2,500 கோடியும், காட்டுப்பள்ளி துறை முக விரிவாக்கப் பணிக்காக அதானி நிறு வனம் ரூ.10 ஆயிரம் கோடியும் முதலீடு செய்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பியூஜியோ கார் உற்பத்தி ஆலையை நிறுவ, பிரான்ஸின் பிஎஸ்ஏ நிறுவனம் ரூ.1,250 கோடி, எய்ஷர் நிறுவனம் தனது விரிவாக்கப் பணிக்காக ரூ.1,500 கோடி முதலீடு செய்கிறது.

ஜப்பான், தென்கொரியா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, அமெ ரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான டீபிஐ, தமிழ கத்தில் காற்றாலைகளுக்கான இறக்கை களை தயாரிக்க உள்ளது. பின்லாந்தின் சல்காம்ப், சீனாவின் லக்சேர் நிறுவனங்கள் வன்பொருள் உற்பத்தி துறையில் முதலீடு செய்கின்றன.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சம வளர்ச்சி பெறும் வகையில் முதலீடுகளை திரட்ட இந்த மாநாட்டில் முக்கியத்துவம் தரப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங் கிய மாவட்டமான நாகையில், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் முதலீடு செய்கிறது. தென் மாவட்டங்களில் பிரிட்டா னியா, ராம்கோ போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

டிவிஎஸ், எம்ஆர்எஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் ரூ.32,206 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்தும் துறையில் ஜிஎஸ்இ அவிக்னா நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு உணவுப் பூங்கா அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

2021-ல் அடுத்த மாநாடு

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அந்த வகையில், 3-வது உலக முதலீட் டாளர்கள் மாநாடு வரும் 2021-ல் நடக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

முன்னதாக, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற் புரை நிகழ்த்தினார். மாநாட்டில், மக்க ளவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை தலைவர் பி.தனபால், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், துணைத் தூதர்கள், தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதியில் தொழில் துறை செயலர் கு.ஞானதேசிகன் நன்றி கூறினார்.

ரூ.58,271 கோடி அதிக முதலீடு

கடந்த 2015-ல் நடந்த முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 நிறுவனங்கள் மூலம், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. தற்போது 2-வது மாநாட் டில் 304 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் பெறப் பட்டுள்ளன. 2015-ல் திரட்டியதைவிட இது ரூ.58 ஆயிரத்து 271 கோடி அதிகம்.

மாநாடு முடிந்த பிறகு செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘முதலீட்டாளர்கள் விரைந்து தொழில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக் கும். சுற்றுச்சூழல் விதிகள் உள்ளிட்ட வற்றை நடைமுறைப்படுத்தாததால்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது’’ என்றார்.

அதிகாரிகளுக்கு பாராட்டு

முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்த தமிழக தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன செயல் துணைத் தலைவர் வேல்முருகன், இயக்கு நர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளை முதல்வர் பழனிசாமி வெகுவாக பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x