Published : 23 Jan 2019 01:03 PM
Last Updated : 23 Jan 2019 01:03 PM

பாதுகாப்பு கவசங்களை மறந்து படகில் பயணம்: சர்ச்சையில் சிக்கிய விழுப்புரம் எஸ்பி, திண்டிவனம் டிஎஸ்பி

மரக்காணத்தில் நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல் படகில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், தடுத்து நிறுத்தும் வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நேற்று தொடங்கி இன்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 'ஆப்ரேஷன் சீ விஜில்' எனும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை பணி நடைபெறுகிறது. கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் மாநில போலீஸார் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். 11 இடங்களில்,காவலர்கள் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழைவதை கண்காணித்து பிடிக்கவேண்டும் என்பதே இந்த ஒத்திகை பணியின் நோக்கம்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடல் கண்காணிப்புப் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை பார்வையிடுவதற்காக மரக்காணம் கடலோர பகுதியில் ஒரு படகில் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். இதில் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், திண்டிவனம் டிஎஸ்பி திருமால், ஆய்வாளர்கள் கோட்டக்குப்பம் சரவணன், வானூர் எழிலரசி மற்றும் போலீஸார் படகில் பயணம் செய்தனர். அவர்கள் பாதுகாப்பு கவச உடைகள் எதுவும் அணியாமல், சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல் துறையினரே அதனை கடைபிடிக்காமல் சென்றது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x