Published : 23 Jan 2019 10:45 AM
Last Updated : 23 Jan 2019 10:45 AM

அதிமுகவுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தவே தினகரனுடன் தம்பிதுரை ‘டீல்’: ஹெச்.ராஜா

பாஜக கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்தும் தொண்டு நிறுவனம் பற்றி விசாரணை நடத்த வேண்டும். அரசின் தொகுப்பு நிதிக்கு, அறநிலையத்துறையில் இருந்து 14 சதவீதம் மட்டும்தான் எடுக்க வேண்டும். அதற்கு மேல் எடுக்கின்ற ஒவ்வொரு காசும் திருட்டு. அதனால்தான் கோயில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அரசு இவ்வளவு நாட்களாக கோயிலில் 14 சதவீதத்துக்கும் மேல் எடுத்துள்ள பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். கோயில்களை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.

கோயில்களில் உற்சவர் சிலைகள்தான் திருடப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எல்லாம் செயல் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் கட்டுப்பாட்டில் இருந்தவை. தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் கோயில்களுக்கு செயல் அலுவலர்களே அறங்காவலர்களாக உள்ளனர். இவர்களில் யாரும் இதுவரை சிலைகள் எப்படி திருடு போயின என்பது குறித்து பேசவில்லை. ஆனால், ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

தம்பிதுரையின் குறிக்கோள் முதல்வரை சங்கடப்படுத்துவதுதான். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என தம்பிதுரை முயற்சி எடுத்தார். அதில் அவருக்கு என்ன பேரம், எவ்வளவு கோடி என்று எனக்கு தெரியாது.

தம்பிதுரையை சேர்த்துக்கொள்வதாக தங்கத்தமிழ்செல்வன் கூறியதில் இருந்து, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. தினகரனுடன் டீல் போட்டு அதிமுக தலைமையை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதற்காக தம்பிதுரை பேசி வருகிறார் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x